என்.எல்.சியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.ஏ.ஆர். அன்சாரி என்.எல். சியின் வரவு-செலவு அறிக்கையில் ரூ.10,000 கோடி முறைகேடு செய்துள்ளதாக சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நமது சங்க தலைவர் தோழர் செல்வராஜ் தொடுத்த வழக்கில், திரு.ஏ.ஆர். அன்சாரியை சி.பி.ஐ விசாரிக்க தரப்பட்ட உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளார் திரு. ஏ.ஆர். அன்சாரி. அத்தடையை நீக்கக்கோரி நமது சங்க தலைவர் தோழர் செல்வராஜ் தொடுத்த வழக்கு (Cr.MP.2/2011 in Cr. Revision 917/2011) சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் விரைவில் விசாரிக்கப்படவிருக்கிறது.