Showing posts with label இ.க.க.மா.லெ. ம.வி. செய்திகள். Show all posts
Showing posts with label இ.க.க.மா.லெ. ம.வி. செய்திகள். Show all posts

அரசியல் பயிற்சி முகாம்


செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலையின் டெல்டா மண்டல அரசியல் பயிற்சி முகாம், வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. 40 கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
08.09.2012 அன்று தத்துவம் மற்றும் பொருளாதாரம் என்ற தலைப்பில் தோழர். ஜே. சிதம்பரநாதன், பொதுச் செயலாளர் அவர்களும், மறுநாள் கட்சியின் அடிப்படை ஆவணத்திலிருந்து, பொதுத்திட்டம்,தமிழக விவசாயத்திட்டம், கட்சி அமைப்புச் சட்டம், உள்ளிட்ட தலைப்புகளில் தோழர். மீ. . பாண்டியன், மாநில செயலாளர், அவர்களும் பயிற்சியளித்தனர். கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் தோழர். அண்ணாதுரை, மத்தியக் குழு உறுப்பினர்கள்  தோழர்கள் நா. குணசேகரன்,           தங்க. தமிழ்வேலன், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் குப்புசாமி, அருணாச்சலம், கடலூர் மாவட்ட செயலாளர். தோழர். ராமர் ஆகியோரும் கலந்துகொண்டனர்,  

தோழர். மு. செல்வராஜ் நினைவேந்தல்


தோழர். மு. செல்வராஜ் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 10.07.2012 மாலை 5.00 மணியளவில் நெய்வேலி, வடகுத்து பவுனாம்பாள் நகரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இ...மா-லெ மக்கள் விடுதலையின் மாநில செயலாளர் தோழர். மீ.. பாண்டியன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தோழர். குணசேகரன் தோழரின் படத்தை திறந்து வைத்தார். நெய்வேலி ஜனநாயக தொழிற்சங்க மையத்தின் பொறுப்பாளர்கள், நண்பர்கள், கட்சியின் கடலூர், சேலம், திருவள்ளூர், தஞ்சை மாவட்ட செயலாளர்கள், இளைஞர் இயக்க மாநில பொறுப்பாளர்  தோழர். தங்க. தமிழ்வேலன், கடலூர் மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர். ராஜா, தோழர்.குப்புசாமி, .தொ.மை. மாநில செயலாளர் தோழர். சுகுந்தன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். கட்சியின் கட்டுப்பாட்டு குழு தலைவர். தோழர். அண்ணாதுரை மறைந்த தோழர் செல்வராஜின் துணைவியார் திருமதி. நற்குணபூசனி அவர்களிடம் கட்சியின் சார்பாக குடும்ப நிதி ரூ.1 லட்சத்தை வழங்கினார். திரளான கட்சி உறுப்பினர்களும், தொழிற்சங்க பொறுப்பாளர்களும், நண்பர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


நினைவேந்தல்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை சார்பாக,  தோழர். மு. செல்வராஜ் அவர்களின் நினைவேந்தல்  10.07.2012, செவ்வாய் மாலை 3.00 மணியளவில் பவுனாம்பாள் நகர், வடக்குத்து, நெய்வேலியில் நடைபெறுகிறது.

கடலூரில் ஆர்ப்பாட்டம்




25.04.2012, காலை 10 மணிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், கடலூர் மாவட்ட தமிழக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் ஒருமைப்பாடு சங்கம் மற்றும் தமிழக இளைஞர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்ட்த்திற்கு த,க. அ. தொ. ஒ. சங்க மாவட்ட செயலாளர். கோபாலகிருஷ்னண் தலைமைதாங்கினார். இ.க.க. மா. லெ. ம.வி. மாவட்ட செயலாளர். மு.செல்வராஜ், த.இ.க மாவட்ட செயலாளர் ராமர், தனியார் அனல் மின் நிலையங்கள் எதிர்ப்பியக்க செயலாளர் சீர்காழி குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்காணும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாநில அரசே!
¨       மாவட்டத்தில் தொடரும் 10 மணி நேர மின்வெட்டை வாபஸ் வாங்கு.
¨       மின் கட்டண உயர்வை வாபஸ் வாங்கு.
¨       நாகை மாவட்டத்தில் அமையும் தனியார் மின் நிலையங்களை உடனே மூடு.
மத்திய அரசே!
¨       ரூ.10,000 கோடி ஊழல் செய்த என்.எல்.சி. அதிபரை பணி நீக்கம் செய்.
¨       மின்சாரத்தை வியாபார பொருளாக்கிய மின்சார சட்டம்-2003ஐ வாபஸ் வாங்கு.
¨       ஜெயங்கொண்டம், திருவாரூர் மின் திட்டங்களை அரசே ஏற்று நடத்து.

சென்னையில் ஆர்ப்பாட்டம்


மின் கட்டண உயர்வை திரும்பப்பெற கோரியும்,
ஜெயங்கொண்டம் பொதுத்துறை மின் திட்டத்தை துவங்காமல் கிடப்பில் போட்டு என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரம் கோடி ஊழல் செய்த அதிகாரி அன்சாரியை கைது செய்து – சொத்தை பறிமுதல் செய்ய கோரியும்!
சி.பி.ஐ. நீதிமன்றம் அன்சாரி மீதான ஊழலை விசாரிக்க ஆணையிட்டும் இன்றுவரை விசாரிக்க மறுக்கும் சி.பி.ஐ யை கண்டித்தும்
19.04.2012, வியாழன், காலை 10 மணிக்கு சென்னை-சென்ட்ரல் மெமொரியல் அரங்கம் அருகில் அசோக்லேலண்ட் தொழிலாளர் ஒருமைப்பாட்டு முன்னணி மற்றும் தமிழக இளைஞர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கே. ராஜாமணி, Ex MC., தமிழக இளைஞர் கழகம் தலைமை தாங்கினார்.
தங்க தமிழ்வேலன், மாநில அமைப்பாளர், தமிழக இளைஞர் கழகம், பேரா. திருமாவளவன், ஆசிரியர், மக்கள் விடுதலை, வழக்குறைஞர். ரஜினிகாந்த், மாநில அமைப்பாளர், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, சிவப்பிரகாசம், து.தலைவர், MRF தொழிலாளர் சங்கம், வழக்குறைஞர்.மனோகரன், உயர்நீதிமன்றம், குமாரசாமி, து.செயலாளர், என்பீல்டு தொழிலாளர் சங்கம், எம்.கருணாகரன், மாநில துணை தலைவர், த.கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் ஒ.சங்கம், பொன்.இரணியன், தலைவர், அசோக்லேலண்ட் தொழிலாளர் ஒருமைப்பாட்டு முன்னணி, வழக்குறைஞர்.மு.இரா.முருகன், உயர்நீதிமன்றம், இரா.உமாபதி, மாவட்ட செயலாளர், பெரியார் திராவிடர் கழகம், ம.ஜெயபிரகாஷ் நாராயணன், ஒருங்கிணைப்பாளர், தமிழர் குடியரசு முன்னணி, மு.நடராசன், ஒருங்கிணைப்பாளர், புரட்சியாளர் எழுச்சி இயக்கம், வழக்குறைஞர்.த.கார்க்கிவேலன், செயலாளர், தோல் மற்றும் தோல்பொருள் ஜனநாயக தொழிலாளர் சங்கம், அருண்சோரி, சென்னை ஒருங்கிணைப்பாளர், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம், ஜா.எமன், த.இ.க. சென்னை, மற்றும் கார்த்தி காஞ்சி த.இ.க. ஆகியோர் உரையாற்றினர்.
300 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்காணும் முழக்கங்கள் எழுப்பட்டன.
Ø  மக்கள் விரோத மின்சார சட்டம் 2003 –ஐ உடனே திரும்பப்பெறு.
Ø  மின்கட்டண உயர்வை வாபஸ் வாங்கு.
Ø  தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வழங்கு.
Ø  கடலோர கிராமங்களில் உருவாக்கப்படும் தனியார் மின்நிலையங்களை உடனே மூடு.
Ø  ஜெயங்கொண்டம், திருவாரூர் மின் திட்டங்களை அரசே ஏற்று நடத்து.
Ø  ஊழல் பெருச்சாளி என்.எல்.சி. அதிபர் அன்சாரியை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்.
Ø  கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே மூடு.
Ø  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் மின்சாரத்தை ரத்து செய்து தமிழக மக்களுக்கும், தமிழக தொழில் நிறுவனங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கு!

சென்னையில் ஆர்பாட்டம்


அனல் மின்நிலையங்களை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை 19.04.2012 அன்று மாலை 6.00 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் எதிரில் தோழர். தங்கதமிழ்வேலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 350 பேர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் என்.எல்.சி சேர்மன் அன்சாரியை சி.பி.ஐ விசாரிக்கவேண்டும், மின்சார சட்டம் 2003 ஐ வாபஸ் பெறவெண்டும், நாகை மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் அமையவிருக்கும் தனியார் முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்ட்டன.

WEDNESDAY, 11 JANUARY 2012




மத்திய, மாநில அரசுகளே !
விவசாயிகள், மீனவர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் பெருந்தோட்டம் சிந்தியா பவர் பிளாண்ட் உள்ளிட்ட நாகை மாவட்டத்தின் அனைத்து தனியார் அனல் மின்நிலையங்களையும் நிரந்தரமாகத் தடை செய் !!

தொடர் முழக்கப்போராட்டம்



விவசாயிகள்மீனவர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் பெருந்தோட்டம் சிந்தியா பவர் பிளாண்ட் உள்ளிட்ட நாகை மாவட்டத்தின் அனைத்து தனியார் அனல் மின் நிலையங்களையும் நிரந்தரமாகத் தடை செய்யக் கோரி தொடர் முழக்கப் போராட்டம்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் (மக்கள் விடுதலை) காவிரி டெல்டா மண்டல கமிட்டி சார்பாக 10.01.2012, செவ்வாய் காலை11 மணியளவில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

கணிசமான பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்டத்திற்கு இ..க மா-லெ (வி) நாகை மாவட்ட செயலாளரும்  அனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டியக்க அமைப்பாளருமான தோழர்என்.குணசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.

..க மா-லெ (வி) பொதுச் செயளாலர் தோழர். ஜே. சிதம்பரநாதன் அவர்கள் போராட்டத்தை துவக்கிவைத்து உரையாற்றினார்.


அனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். எஸ். சுந்தர்,..க மா-லெ (வி) மையக்குழு உறுப்பினரும் தமிழக  இளைஞர் கழக மாநில அமைப்பாளருமான தோழர். தங்க. தமிழ்வேலன், நமது சங்க தலைவரும் இ..க மா-லெ (வி) கடலூர் மாவட்ட செயலாளருமான தோழர். எம். செல்வராஜ் ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் விளக்கவுரையாற்றினர்.

..க மா-லெ (வி) மாநில செயலாளர் தோழர். மீ.த. பாண்டியன் நிறைவுரையாற்றினார்.

தொடர் முழக்கப்போராட்டம் தேதி மாற்றம்


“தானே” புயல் பாதிப்புகள் காரணமாக 02-01-2012 அன்று சி.பி.ஐ மக்கள் விடுதலை)  சார்பாக சீர்காழியில் நடைபெறுவதாக இருந்த தனியார் மின்நிலைய எதிர்ப்பு தொடர்முழக்க போராட்டம் 10.01.2012 அன்று  காலை 11.00 மணிக்கு சீர்காழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு முதலாளியின் லாபத்தை விட ஓராயிரம் குடும்பங்களின் வாழ்வுரிமை மேலானது !


விளைநிலங்களை அழித்து, கடல் வளத்தை கெடுத்து சுற்றுச் சூழலை மாசுபடுத்தி, கிராமப்புற மக்களை சாகடித்து பெருமுதலாளிகளை வாழவைக்கும் பெருந்தோட்டம் சிந்தியா பவர் பிளாண்ட் உள்ளிட்ட நாகை மாவட்டத்தின் அனைத்து தனியார் அனல் மின்நிலையங்களையும்

நிரந்தரமாகத் தடை செய்யக்கோரி


தொடர் முழக்கப்போராட்டம்


மத்திய ; மாநில அரசுகளே !
Ø 
தமிழகத்தின் நெற்களஞ்சியமான நாகை மாவட்டத்தின் விளைநிலங்களை அழித்து விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை கெடுக்கும் மாவட்டத்தின் அனைத்து அனல் மின் நிலையங்களையும் தடை செய் !

Ø தனியார் கம்பெனிகள் இதுவரை அபகரித்துள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கைப்பற்றி மேற்கு வங்கத்தைப்போல் நில மேம்பாடு மற்றும்மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ஏழை விவாசாயிகளுக்கு பிரித்துக்கொடு !

Ø நாட்டின் மின்சாரத் தேவைக்கு பல்லாயிரம் கோடிகளை செலவிட்டு கிடப்பில் போட்டுள்ள ஜெயங்கொண்டம் அரசு மின் உற்பத்தித்  திட்டத்தை உடனே தொடங்குமேலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத, விவசாயத்தை அழிக்காத காற்றாலை, கடலலை, சூரிய சக்தி மற்றும் புவி வெப்ப சக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய வழி செய் !

Ø நாகை மாவட்டத்தின் நீண்ட கடற்கரையை பாழ்படுத்தி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அனைத்து அனல் மின்நிலையங்களுக்கும் அனுமதி வழங்காதே !


Ø நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரம் கோடி ஊழல் செய்து அரசு மின் நிறுவனங்களை நஷ்டப்படுத்தி தனியார் மின் நிறுவனங்கள் கொள்ளையிட ஊக்கமளிக்கும் என்.எல்.சி. சேர்மன் ஊழல் அன்சாரியை கைது செய்து ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய் !

அணு ஆபத்து வேண்டாம், மக்களின் வாழ்வே பெரிதென்று கூடங்குளம் அணு உலைகெதிராகப் போராடும் இடிந்தகரை மக்களின் கோரிக்கையை நிறைவேற்று.

உழைக்கும் மக்களே !
    
நமது வாழ்வாதாரங்கள அழிக்க வரும் இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு பின்புலமாக இருக்கும் தனியார் மயம், உலகமயம் என்ற தேசவிரோத கொள்கைகளை அமுல்படுத்தும் காங்கிரஸ் மற்றும் கழக ஆட்சியாளர்களுக்கு எதிராக..

மாபெரும் அரசியல் சக்தியாக அணிதிரள்வோம் !

வாழ்வுரிமைக்கான வீரம்செறிந்த நந்திகிராம், சிங்கூர் மக்களின் போராட்ட வெற்றியை நமது மண்ணிலும் நடத்திக் காட்டுவோம்.


நாள் : 02-01-2012 திங்கள் காலை 11-00 மணி
இடம்: சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 




தலைமை:

தோழர் என். குணசேகரன் அவர்கள்
மாவட்ட செயலாளர் CPI ML (மக்கள் விடுதலை)
அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டியக்க அமைப்பாளர்

விளக்கவுரை:
தோழர் தங்க. தமிழ்வேலன் அவர்கள்
மையக்குழு உறுப்பினர் CPI ML (மக்கள் விடுதலை)
(தமிழக இளைஞர் கழக மாநில அமைப்பாளர்)

தோழர் அரங்க. குணசேகரன் அவர்கள்
மாநிலதலைவர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டியக்கம்

தோழர் M. செல்வராஜ் அவர்கள்
NLC தொழிற்சங்க தலைவர்
கடலூர் மாவட்ட செயலாளர் CPI ML (மக்கள் விடுதலை)

தோழர் S. சுந்தர் ஒருங்கிணைப்பாளர்
அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டியக்கம்

தோழர் R. அருணாச்சலம் அவர்கள்
தஞ்சை மாவட்ட அமைப்பாளர்   CPI ML  (மக்கள் விடுதலை)

தோழர் A. லூர்துசாமி அவர்கள்
மயிலாடுதுறை வட்ட செயலாளர் CPI ML (மக்கள் விடுதலை)

தோழர் சுப்பு. மகேஷ் அவர்கள் தமிழர் உரிமை இயக்கம்
அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டியக்க இணை அமைப்பாளர்

தோழர் U. ராஜு அவர்கள்
தலித் விடுதலைக்கான மாற்று முன்னணி

திரு N. சிவப்பிரகாசம்.B.Sc.,, அவர்கள்
ஊராட்சி மன்ற தலைவர், திருவெண்காடு.

வழக்கறிஞர் சங்கர் அவர்கள் ஒருங்கிணைப்பாளர்,
கிழக்குக் கடற்கரை மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு.

தோழர் பெரியார் செல்வம் அவர்கள்
தமிழ் இளைஞர் பேரவை மாவட்ட தலைவர்

தோழர் K, விஜயபாலன் அவர்கள்
தமிழக மீனவர்கள் முன்னணி, தரங்கம்பாடி.

தோழர் நட்சத்திரராஜ் சமூக ஆர்வலர்.

தோழர் அன்பு. ராசப்பா அவர்கள்
பு.க.க.இ. மன்றம், மாவட்ட செயலாளர்

தோழர் மதிவாணன் சமூக ஆர்வலர், புளியந்துறை.

தோழர் தட்சிணாமூர்த்தி அவர்கள்
செம்பை ஒன்றிய அமைப்பாளர் CPI  (மக்கள் விடுதலை)

தோழர் M.குணசேகரன் அவர்கள்
மீனவர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு பேரவை, வாணகிரி.

தோழர் இராமலிங்கம் ஆசிரியர் அவர்கள்
புரட்சியாளர் அம்பேத்கர் அரசு பணியாளர் அமைப்பு

திரு நடேச நாட்டார் அவர்கள் மடத்துக்குப்பம்

தோழர் இ. பாரதி அவர்கள் துணைத் தலைவர்
அம்பேத்கர் பொருளாதார மேம்பாட்டு சங்கம்

தோழர் ப. பெருமாள் அவர்கள் மா. தலைவர்.
புரட்சியாளர் அம்பேத்கர் அரசு பணியாளர் அமைப்பு

நிறைவுரை:
தோழர். மீ. த. பாண்டியன் அவர்கள்
மாநில செயலாளர் CPI ML (மக்கள் விடுதலை)

நன்றியுரை:
தோழர் P. கருணாநிதி அவர்கள் CPI ML(மக்கள் விடுதலை)
ஊ. ம. உறுப்பினர், பெருந்தோட்டம்.

  CPI ML (மக்கள் விடுதலை)
காவிரி டெல்டா மண்டல கமிட்டி.

தொடர்புக்கு:  9524584767