செப்டம்பர்
8 மற்றும் 9 தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலையின் டெல்டா மண்டல அரசியல் பயிற்சி முகாம், வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. 40 கட்சி உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர்.
08.09.2012
அன்று தத்துவம் மற்றும் பொருளாதாரம் என்ற தலைப்பில் தோழர். ஜே. சிதம்பரநாதன், பொதுச் செயலாளர்
அவர்களும், மறுநாள் கட்சியின் அடிப்படை ஆவணத்திலிருந்து,
பொதுத்திட்டம்,தமிழக விவசாயத்திட்டம், கட்சி அமைப்புச் சட்டம், உள்ளிட்ட தலைப்புகளில் தோழர்.
மீ. த. பாண்டியன்,
மாநில செயலாளர், அவர்களும் பயிற்சியளித்தனர்.
கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் தோழர். அண்ணாதுரை,
மத்தியக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் நா. குணசேகரன், தங்க. தமிழ்வேலன், மாநிலக்குழு
உறுப்பினர்கள் தோழர்கள் குப்புசாமி, அருணாச்சலம், கடலூர் மாவட்ட செயலாளர். தோழர். ராமர் ஆகியோரும் கலந்துகொண்டனர்,