சென்னையில் ஆர்ப்பாட்டம்


மின் கட்டண உயர்வை திரும்பப்பெற கோரியும்,
ஜெயங்கொண்டம் பொதுத்துறை மின் திட்டத்தை துவங்காமல் கிடப்பில் போட்டு என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரம் கோடி ஊழல் செய்த அதிகாரி அன்சாரியை கைது செய்து – சொத்தை பறிமுதல் செய்ய கோரியும்!
சி.பி.ஐ. நீதிமன்றம் அன்சாரி மீதான ஊழலை விசாரிக்க ஆணையிட்டும் இன்றுவரை விசாரிக்க மறுக்கும் சி.பி.ஐ யை கண்டித்தும்
19.04.2012, வியாழன், காலை 10 மணிக்கு சென்னை-சென்ட்ரல் மெமொரியல் அரங்கம் அருகில் அசோக்லேலண்ட் தொழிலாளர் ஒருமைப்பாட்டு முன்னணி மற்றும் தமிழக இளைஞர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கே. ராஜாமணி, Ex MC., தமிழக இளைஞர் கழகம் தலைமை தாங்கினார்.
தங்க தமிழ்வேலன், மாநில அமைப்பாளர், தமிழக இளைஞர் கழகம், பேரா. திருமாவளவன், ஆசிரியர், மக்கள் விடுதலை, வழக்குறைஞர். ரஜினிகாந்த், மாநில அமைப்பாளர், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, சிவப்பிரகாசம், து.தலைவர், MRF தொழிலாளர் சங்கம், வழக்குறைஞர்.மனோகரன், உயர்நீதிமன்றம், குமாரசாமி, து.செயலாளர், என்பீல்டு தொழிலாளர் சங்கம், எம்.கருணாகரன், மாநில துணை தலைவர், த.கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் ஒ.சங்கம், பொன்.இரணியன், தலைவர், அசோக்லேலண்ட் தொழிலாளர் ஒருமைப்பாட்டு முன்னணி, வழக்குறைஞர்.மு.இரா.முருகன், உயர்நீதிமன்றம், இரா.உமாபதி, மாவட்ட செயலாளர், பெரியார் திராவிடர் கழகம், ம.ஜெயபிரகாஷ் நாராயணன், ஒருங்கிணைப்பாளர், தமிழர் குடியரசு முன்னணி, மு.நடராசன், ஒருங்கிணைப்பாளர், புரட்சியாளர் எழுச்சி இயக்கம், வழக்குறைஞர்.த.கார்க்கிவேலன், செயலாளர், தோல் மற்றும் தோல்பொருள் ஜனநாயக தொழிலாளர் சங்கம், அருண்சோரி, சென்னை ஒருங்கிணைப்பாளர், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம், ஜா.எமன், த.இ.க. சென்னை, மற்றும் கார்த்தி காஞ்சி த.இ.க. ஆகியோர் உரையாற்றினர்.
300 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்காணும் முழக்கங்கள் எழுப்பட்டன.
Ø  மக்கள் விரோத மின்சார சட்டம் 2003 –ஐ உடனே திரும்பப்பெறு.
Ø  மின்கட்டண உயர்வை வாபஸ் வாங்கு.
Ø  தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வழங்கு.
Ø  கடலோர கிராமங்களில் உருவாக்கப்படும் தனியார் மின்நிலையங்களை உடனே மூடு.
Ø  ஜெயங்கொண்டம், திருவாரூர் மின் திட்டங்களை அரசே ஏற்று நடத்து.
Ø  ஊழல் பெருச்சாளி என்.எல்.சி. அதிபர் அன்சாரியை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்.
Ø  கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே மூடு.
Ø  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் மின்சாரத்தை ரத்து செய்து தமிழக மக்களுக்கும், தமிழக தொழில் நிறுவனங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கு!