நமது சங்கம் 23.03.2012 அன்று
தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியது. காலை 5.30 மணிக்கு
சுரங்கம்-2ல் வாயிற்கூட்டம் நடைபெற்றது. தலைவர் சிறப்புரையாற்றினார். நாள் முழுவதும்
நெய்வேலி நகரியம் முழுவதும் ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது பகல் 1.30 மனியளவில் அனல்
மின்நிலையம்-2ல் பிரச்சாரமும், மாலை 7.00 மணியளவில் 8 ரோடு சந்திப்பில் தெருமுனைக்கூட்டமும்
நடைபெற்றது. பிரச்சாரத்தில் நமது சங்க தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட
அனைத்து பகுதி பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
26.03.2012 அன்று மாலை 7.00 மணியளவில் மெயின்பஜாரில்
தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. தலைவர் சிறப்புரையாற்றினார்..
27.03.2012 முதல் 31.03.2012 வரை அனைத்து
அலுவலக, ஆலைப்பகுதிகளிலும் பிரச்சாரமும் துண்டுபிரசுர விநியோகமும் நடைபெற்றது. ஆதரவாளர்களின்
வீடுகளுக்குச் சென்று ஆதரவு திரட்டப்பட்டது.