மத்திய
அரசே!
என்.எல்.சியின்
5% பங்கு
விற்பனையை
உடனடியாக வாபஸ் வாங்கு!
ஜூலை—3 முதல் காலவரையற்ற
வேலை நிறுத்தம்!
அன்பார்ந்த தொழிலாளர்கள், ஊழியர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள், காண்ட்ராக்ட், சொசைட்டி,
ஹவுசிகோஸ் தொழிலாளர்களே! அனைவருக்கும் வணக்கம்.
மத்திய அரசின் அமைச்சரவை குழு 21-06-2013 அன்று கூடி என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்று
ரூ.466 கோடி திரட்டுவது என்று முடிவு
செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து லாபம் ஈட்டியும்,
நவரத்னா அந்தஸ்தை பெற்ற சிறந்த பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் என்.எல்.சி.யின் பங்குகளை
விற்பனை செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவை நெய்வேலி தொழிற்சங்கங்கள், பொறியாளர், அதிகாரிகள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
என்.எல்.சி.
நிறுவனத்தின் பங்குகளை இவ்வாறு சிறுக சிறுக விற்பனை செய்து தனியாரிடம் ஒப்படைக்கும்
மத்திய அரசின் இத்தகைய தொழிலாள விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்திடவும், என்.எல்.சி.
நிறுவனத்தை பாதுகாத்திடவும், ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்திட வேண்டுமென தொழிலாளர், ஊழியர்,
பொறியாளர், அதிகாரிகள், காண்ட்ராக்ட், சொசைட்டி, ஹவுசிகோஸ் தொழிலாளர்கள் அனைவரையும்
கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
என்.எல்.சி.யின்
5% பங்குகளை விற்பனை
செய்ய மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவை வாபஸ் பெறும்வரை காலவரையற்ற வேலை நிறுத்தம்
செய்திட தொழிற்சங்க – பொறியாளர், அதிகாரிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
போராட்ட நடவடிக்கைகள்
27-06-2013 வியாழன் - கோரிக்கை அட்டை அணிதல்
28-06-2013 வெள்ளி - வாயிற்கூட்டம்
29-06-2013 சனி - வாயிற்கூட்டம்
01-07-2013 திங்கள் - அனைத்து
பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம்.
மாலை 6.00 மணிக்கு அண்ணா தொழிலாளர்
ஊழியர் சங்க
அலுவலகத்தில் செயல்வீர்ர்கள்
கூட்டம்.
02-07-2013 செவ்வாய் - ஸ்கியூ பாலம் அருகில் உண்ணாவிரதம்
03-07-2013 புதன் - காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு பொது
கூட்டம்
தொ.மு.ச. அலுவலகம் – மாலை 6.00 மணியளவில்
எனவே
அனைத்து தொழிலாள, ஊழியர், பொறியாளர்கள், அதிகாரிகள், காண்ட்ராக்ட், சொசைட்டி, ஹவுசிகோஸ்
தொழிலாளர்களும் நிறுவனத்தை பாதுகாத்து பங்கு விற்பனையை தடுத்து நிறுத்திட போராட்ட்த்தை
வெற்றிபெறச் செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
தொ.மு.ச அ.தொ.ஊ.ச CITU PTS GEA EA LLF
HMS NGEA OA
INTUC
BMS AITUC MLF
DMTU DTUC AIUTUC NTU
தொ.வா.ச. MTU
மற்றும் அனைத்து அசோசியேசன்கள்