நமது சங்க பொதுச்செயலாளர் அவர்கள், இரண்டாம் சுரங்கம் மற்றும் விரிவாக்கத்தின் தலைமை பொதுமேலாளர் அவர்களுக்கு, 19.10.2011 தேதியிட்ட கடிதத்தின் மூலம் விடுத்துள்ள வேண்டுகோளில், “பி” பாய்ண்ட் பாலம் முதல் மந்தாரக்குப்பம் வரையிலான சாலையில் கடந்த ஒரு மாத காலமாக இரவுநேரங்களில் விளக்குகள் எரியாததால், இரண்டாம் சுரங்கம் மற்றும் விரிவாக்கத்திற்கு, பணிக்கு வரும் பணியாளர்களுக்கு விபத்து நேரிடும் ஆபத்தான சூழல் நிலவுவதால் உடனடியாக இரவு நேரங்களில் மேற்படி விளக்குகள் எரிவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Chief Editor: Com.J. Chithambaranathan,MA BL.
18.10.2011 நிர்வாகக்குழுக்கூட்ட முடிவுகள்
18.10.2011ல் வடகுத்தில் சங்கத்தின் நிர்வாகக்குழுக்கூட்டம்(20) நடைபெற்றது. சங்கத்தலைவர் தோழர். மு.செல்வராஜ் தலைமை தாங்கினார். நீண்ட விவாதத்திற்கு பிறகு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. அதிகாரிகளுக்கு இணையாக லாபத்தில் பங்கு கோரும் இன்சென்டிவ், போனஸ் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் மீது தொடரியக்கம் நடத்துவது.
2. சங்கத்தலைவர் பணிநீக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதான என்.எல்.சி. நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டரீதியான தீர்வுகாண்பது.
3. ஊழல்களுக்கெதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது.
கூட்ட இறுதியில் சங்க பொருளாளர் நன்றி கூறினார்.
என்.எல்.சி. அதிபர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஏ.ஆர். அன்சாரி அவர்கள்மீது சி.பி.அய். வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
என்.எல்.சி. அதிபர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஏ.ஆர். அன்சாரி அவர்கள் ரூ.10000 கோடி ஊழல் செய்திருப்பதாகவும் அவரை சி.பி.அய். விசாரிக்க உத்தரவிடவேண்டுமெனவும் நமது சங்கத்தலைவர் தோழர். எம். செல்வராஜ் அவர்கள் சென்னை சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திரு. எல். யூசுப் அலி அவர்கள், என்.எல்.சி. அதிபர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஏ.ஆர். அன்சாரி அவர்கள்மீது சி.பி.அய். வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென 04.07.2011 அன்று உத்தரவிட்டார்.
என்.எல்.சி. அதிபர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஏ.ஆர். அன்சாரிக்கு எதிராக நமது ஜனநாயக தொழிற்சங்க மையத்தின் (DTUC) மாநில தலைவர் தோழர். ஜே. சிதம்பரநாதன் உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விவரம்
என்.எல்.சி. அதிபர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஏ.ஆர். அன்சாரி அவர்கள் ரூ.10000 கோடி ஊழல் செய்திருப்பதாகவும் அவரை சி.பி.அய். விசாரிக்க உத்தரவிடவேண்டுமெனவும் நமது ஜனநாயக தொழிற்சங்க மையத்தின் (DTUC) மாநில தலைவர் தோழர். ஜே. சிதம்பரநாதன் தொடுத்த வழக்கு ( Writ Petition (Criminal) No.98 0f 2011) உச்சநீதிமன்றத்தில்13.05.2011ல் விசாரிக்கப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட உத்தரவிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெஞ்சில் இவ்வழக்கு (W.P. No.13040/2011) நிலுவையில் உள்ளது.
Subscribe to:
Posts (Atom)