என்.எல்.சி. அதிபர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஏ.ஆர். அன்சாரி அவர்கள்மீது சி.பி.அய். வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.


                              
என்.எல்.சி. அதிபர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஏ.ஆர். அன்சாரி அவர்கள் ரூ.10000 கோடி ஊழல் செய்திருப்பதாகவும் அவரை சி.பி.அய். விசாரிக்க உத்தரவிடவேண்டுமெனவும் நமது சங்கத்தலைவர் தோழர். எம். செல்வராஜ் அவர்கள்  சென்னை சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திரு. எல். யூசுப் அலி அவர்கள், என்.எல்.சி. அதிபர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஏ.ஆர். அன்சாரி அவர்கள்மீது சி.பி.அய். வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென 04.07.2011 அன்று உத்தரவிட்டார்.