15.12.20011 பகல் 1.45 மணியளவில், இரண்டாம் அனல் மின்நிலையத்தில் பணியாற்றிய சீனியர் டெக்னீஷியன்கள், தோழர்கள் எஸ். ஶ்ரீதரன் மற்றும் டி.எம். மோகன் குமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் இரண்டாம் அனல் மின் நிலையம் நோக்கி இரண்டாம் பணிக்கு உரஆலை அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த மினி வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொழிற்சங்க தலைவர்களுக்கும் நிர்வாகத் தரப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தொழிற்சங்க தலைவர்கள் வைத்த இரண்டு கோரிக்கைகளான
1. உயிரழந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி. யில்
வேலை வாய்ப்பு
2.நிறுத்தப்பட்ட பிக்-அப் பேருந்துகளை மீண்டும் இயக்கவேண்டும்
ஆகியவற்றை நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டதால் உடல்களை பிணவறைக்கு அனுப்ப மறுத்த தொழிலாளர்கள் உடல்களை குளிர்பதன கண்ணாடி பெட்டிகளில் மருத்துவ மனையிலேயே வைக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக தொழிலாளர்கள் பார்வையிட்டுவருகின்றனர். மருத்துவமனை எதிரில் சாலைமறியல் செய்யப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட என்.எல்.சி பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் அனல் மின்நிலையத் தொழிலாளர்கள் இரவுப்பணியிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நமது சங்கம், உயிரழந்த இரண்டு தோழர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. என்.எல்.சி. நிர்வாகம் தனது பிடிவாதத்தை கைவிட்டு மேற்படி இரண்டு கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.