அன்பார்ந்த தொழிலாள தோழர்களே,
நமது
நிறுவனத்தில் ரகசிய வாக்கெடுப்புக்கான பணிகளை துவக்கியுள்ளது மத்திய தொழிலாளர்
துறை. இந்நிலையில் Coal India
நிறுவனத்தில் புதிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை துவங்கி 25%
ஊதிய உயர்வு
பெறுவதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அலவன்ஸ் பற்றிய பேச்சுவார்த்தை
நடைபெற்றுவருகிறது. நமது
நிறுவனத்தில் சிறப்பான ஊதிய உயர்வு ஒப்பந்தம் உருவாகவும், எதிர்வரும் நான்கு
ஆண்டுகளுக்கான நமது உரிமைகளை மீட்டெடுக்கவும், உறுதியான, சரியான தொழிற்சங்கங்களை தேர்ந்தெடுப்பது
நம் அனைவரின் கடமையாகும்.
நமது நிறுவனம்
ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளில் சிக்கி கடும் நெருக்கடியை சந்தித்துவருகிறது. நமது நிறுவனத்தின்
விரிவாக்கத்திட்டங்களில் சுமார் ரூ.10,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கத்திட்டங்களில் உற்பத்தியை
துவக்குவதற்கு ஏற்பட்ட காலதாமதத்தால், வட்டி, செலவுகள், உற்பத்தி இழப்பு ஆகியவற்றினால்
சுமார் ரூ.4,000 கோடி
செலவு அதிகரித்துள்ளது.
எனவேதான் என்.எல்.சி. நிறுவனத்தை பாதுகாக்கும்
மிகப்பெரிய கடமையான, ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கெதிரான
போராட்டத்தை எமது சங்கம் நடத்திவருகிறது.
இந்த
போராட்டத்தில் எமது சங்க தலைவர் IPF செல்வராஜ் பணிநீக்கம்
செய்யப்பட்டும், மற்ற
அனைத்து நிர்வாகிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை, தண்டனை, பணியிடமாற்றம் என கடும்
அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். மேலும் அடக்குமுறை தொடர்ந்தாலும்
உறுதியுடன் இப்போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று வெற்றி பெறுவோம் என
உறுதியளிக்கிறோம்.
இந்நிலையில் எமது சங்கம் விளம்பரத்திற்காக இந்த
போராட்டத்தை நடத்துவதாக நிர்வாகமும், சில சங்கங்களும் எமது
போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எமது சங்கம்
பதிலளிக்க விரும்பவில்லை. இவர்கள்
யார் என நீங்கள் புரிந்துகொள்ள...
விரிவாக்கத்திட்டங்களில்
முதலீடு செய்யப்பட்டுள்ள 10,000 கோடி
ரூபாய் என்.எல்.சி. வளர்ச்சிக்காக மத்திய அரசு
வழங்கிய தொகை அல்ல. முழுக்க
முழுக்க என்.எல்.சி. தொழிலாளர்களின் உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும்
உருவாக்கப்பட்ட உபரி தொகை ஆகும். இத்தொகை
விரையம் செய்யப்படுவதை, வீணடிக்கப்படுவதை
சரியான தொழிற்சங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டுருக்க முடியாது. எனவே கடுமையான இழப்புகளையும்
தாங்கிக்கொண்டு இப்போராட்டத்தை நடத்திவருகிறோம்.
நெய்வேலி
தொழிலாளர்கள் கடந்த காலத்தில் போராடி பெற்ற பல சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. அடக்குமுறை நிர்வாகத்தால் தொழிற்சங்க செயல்பாடுகள்
முடக்கப்பட்டுள்ளது. தொழிற்பகுதிகள்
சிறைக்கூடங்களாக மாற்றப்பட்டது. இதைப்பற்றியெல்லாம்
கவலைப்படாமல் மவுனம் சாத்தித்து வரும் சங்கங்களின் பின்னணியில், அரசியல் செல்வாக்கு, ஆளுங்கட்சி அந்தஸ்து,
MP களின் பலம்
எல்லாம் இருந்தும் எந்த மாற்றத்தையும் இவர்களால் கொண்டு வர முடியாதது ஏன்?
நரசிம்மன்
காலத்தில் தொழிற்சங்கத்தலைவர்கள் வியாபாரிகளாகவும், தொழிற்சங்கம்
பணம் சம்பாதிக்கும் வியாபார நிறுவனமாகவும் மாற்றப்பட்டது. அன்றைய
எழு சங்க கூட்டமைப்பு நரசிம்மனின் கைப்பாவையாக செயல்பட்டது. அதனால்
தொழிற்சங்க கூட்டமைப்பு மீதும் தொழிலாளர்கள் கடும் அதிருப்தி கொண்டிருந்தனர். அத்தருணத்தில்
நரசிம்மனிடமிருந்து தொழிற்சங்க இயக்கத்தை மீட்டெடுக்க எமது சங்கம் நடத்திய ரகசிய
வாக்கெடுப்பு இயக்கம் தொழிலாளர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்ததை அனைவரும்
அறிவீர்கள். அன்றைய மாயையிலிருந்து விடுபடமுடியாத தலைவர்கள்தான்
இன்றுவரை பல தொழிற்சங்கங்களை செயல்படவிடாமல் திணறடித்து வருகின்றனர்.
அடக்குமுறை
நிர்வாகத்தை எதிர்த்து கூட்டணி அமைக்க முடியாதவர்கள், ரகசிய
வாக்கெடுப்பு தேர்தலுக்கு மட்டும் கூட்டணி அமைத்து நிற்பது எதற்காக? கடந்த
இரண்டு ஆண்டுகளில் நிர்வாகத்தை எதிர்க்க முடியாத பேச்சுவார்த்தை சங்கங்கள்
உள்ளிட்ட எந்த சங்கத்தாலும் தொழிலாளர்களின் உரிமைகளையும், ஊதியத்தையும்
பாதுகாக்க முடியாது. உதாரணமாக அனைத்து சங்கங்கள் தலைமையில் நடைபெற்ற
காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் 40 நாள் வேலைநிறுத்தமே இதற்கு சான்றாகும். எனவே
வருகின்ற ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத அழுக்கு
மூட்டைகளை தூக்கி எறியுங்கள்.
தேர்தல் நேரத்தில்
பல வாக்குறுதிகளை தருவார்கள், ஊரை சொல்வார்கள், ஜாதியை சொல்வார்கள், மாயையிலே
சிக்கிவிடாதீர்கள். பெரிய சங்கமாக இருந்து இதுவரை எதுவும் சாதிக்கமுடியாதவர்களுக்கு
வாக்களித்தால் மீண்டும் எதை சாதிக்க போகிறார்கள். பல பெரிய சங்கங்களை
முதல்ரகசிய வாக்கெடுப்புக்குப்பிற்கு பிறகு சிறிய சங்கங்களாக மாற்றியது உங்களுடைய
வாக்குகளால்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
v எமது
சங்கத்தை பொறுத்த வரை 15 ஆண்டுகளாக சரியான திசையில் தொழிற்சங்கத்தை நடத்தி
வருகிறோம் அதற்காக DTUCக்கு வாக்களியுங்கள்.
v
சிறிய சங்கமாக இருந்தாலும் பெரிய சங்கங்களால் முடியாத பல
சாதனைகளை நிகழ்த்தி காட்டியுள்ளோம் அதற்காக DTUCக்கு வாக்களியுங்கள்.
v எமது
சங்கம் அடக்குமுறை நிர்வாகத்தை எதிர்த்து போராடுவது சரி என்றால் DTUCக்கு வாக்களியுங்கள்.
v எமது
சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் தவறென்றால்
DTUCக்கு வாக்களியுங்கள்.
v எமது
சங்க தலைவர் IPF
செல்வராஜ் பணிநீக்கம்
செய்யப்பட்டது தவறென்றால் நிர்வாகத்திற்கு பாடம் கற்பிக்க DTUCக்கு
வாக்களியுங்கள்.
v ஊழல்,
நிர்வாக சீர்கேடுகளிலிருந்து என்.எல்.சி. நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால்
அந்த போராட்டத்தை உறுதியாக நடத்தும் DTUCக்கு வாக்களியுங்கள்.
இழந்த அனைத்து சலுகைகளையும் மீண்டும் பெற்றிடவும், சிறப்பான ஊதியமாற்று ஒப்பந்தம்
உருவாக்கிடவும், DTUCக்கு வாக்களியுங்கள்.