என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 14,000 பேர், தங்களுடைய ஊதிய உயர்வு, சமவேலைக்கு சமஊதியம், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த 25 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.உண்ணாவிரதம், சாலை, ரயில் மறியல் போராட்டங்களை நடத்தினர். பல சுற்று முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. நாளை 26வது நாள் ஏஐடியுசி பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா, எம்.பி., தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரிக்கை பேரணி, நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்துகின்றனர்.