இரண்டாம் அனல்
மின் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நமது சங்கப் பொறுப்பாளர்கள் எல். ராஜேந்திரன்,
துணைத்தலைவர், இரா. இரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் மற்றும் பி. ராமலிங்கம், செயலாளர் ஆகியோரை
முறையே சுரங்கம்-1, சுரங்கம்-2 மற்றும் சுரங்கம்-1ஏ ஆகிய பகுதிகளுக்கு பணியிட மாற்றம்
செய்து என்.எல்.சி. நிர்வாகம் 26.05.2011 அன்று உத்திரவிட்டது.
இந்நடவடிக்கையானது,
தொழில் தகராறு சட்டம், 1947, அட்டவணை-5 ன் கீழ் தொழிற்சங்க விரோத நடவடிக்கையாகும் என
குறிப்பிட்டு சென்னை, மண்டல தொழிலாளர் ஆணையாளர் (மத்திய) முன்பு நமது சங்கம் சார்பாக
தொழில் தகராறை 01.06.2011ல் எழுப்பினோம்.
அது சம்பந்தமான
சமரச பேச்சுவார்த்தை, நமது சங்கத்திற்கும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கும் இடையில் சென்னை, தொழிலாளர் துணை ஆணையாளர் (மத்திய) முன்பு 26.05.2011ல் தொடங்கி பல்வேறு நாட்களில் நடைபெற்று இறுதியாக 23.11.2011ல் நடைபெற்ற
பேச்சுவார்த்தை முறிவடைந்தது. முறிவறிக்கை மத்திய அரசுக்கு 12.12.2011ல் அனுப்பிவைக்கப்பட்டது.
அம்முறிவறிக்கையை
பரிசீலித்த மத்திய அரசு, தொழிலாளர் அமைச்சகம், “ துணைத்தலைவர், பொதுச்செயலாளர் மற்றும்
செயலாளர் தொழிற்சங்கப் பொறுப்பு வகிக்கும் திருவாளர்கள் எல்.ராஜேந்திரன், ஆர். ரவிச்சந்திரன்
மற்றும் பி.ராமலிங்கம் ஆகியோரை பணியிட மாற்றம் செய்துள்ள, நிர்வாகத்தின் நடவடிக்கை
நியாயமானதுதானா? சம்மந்தபட்ட பணியாளர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட வேண்டும்” என
விசாரித்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கிடுமாறு சென்னை, மத்திய அரசு தொழிலாளர்
தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு 19.04.2012 அன்று உத்திரவிட்டுள்ளது.