நெய்வேலி
சி.ஐ.டி.யூ. வளாகத்தில் 19.02.2013 மாலை
7.30 மணியளவில் அகில இந்திய வேலைநிறுத்த அறிவிப்பு கூட்டம், சி.ஐ.டி.யூ. தலைவர் திரு.
குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. வேலைநிறுத்தத்தை விளக்கி திரு. நாரயணசாமி, ஏ.ஐ.யூ.டி.யூ.சி, திரு. வெங்கடேசன், ஏ.ஐ.டி.யூ.சி, நமது சங்க பொதுச்செயலாளர்,
திரு. முருகன், பி.எம்.எஸ்., திரு. திருநாவுக்கரசு,
தொ.வி.மு. ஆகியோர் உரையாற்றினர். வேலைநிறுத்தம் 19.02.2013 இரவு பணியில் துவங்கி
21.02.2013 இரண்டாம் பணி முடிவில் முடிவடைவதாக, சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் திரு. வேல்முருகன்,
48 மணி நேர வேலைநிறுத்தத்தை அறிவித்தார். திரு.வைத்தி, டி.எம்.டி.யூ. நன்றி கூறினார்.
வேலைநிறுத்தக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஹெச்.எம்.எஸ்., தொ.மு.ச., ஐ.என்.டி.யூ.சி
சங்கங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. (அ.தொ.ஊ.ச. வேலைநிறுத்தம் பற்றி கருத்து
எதுவும் தெரிவிக்கவில்லை பா.தொ.ச. வேலைநிறுத்தத்தை
விமரிசித்து துண்டறிக்கை வெளியிட்டிருந்தது)