ஒரு முதலாளியின் லாபத்தை விட ஓராயிரம் குடும்பங்களின் வாழ்வுரிமை மேலானது !


விளைநிலங்களை அழித்து, கடல் வளத்தை கெடுத்து சுற்றுச் சூழலை மாசுபடுத்தி, கிராமப்புற மக்களை சாகடித்து பெருமுதலாளிகளை வாழவைக்கும் பெருந்தோட்டம் சிந்தியா பவர் பிளாண்ட் உள்ளிட்ட நாகை மாவட்டத்தின் அனைத்து தனியார் அனல் மின்நிலையங்களையும்

நிரந்தரமாகத் தடை செய்யக்கோரி


தொடர் முழக்கப்போராட்டம்


மத்திய ; மாநில அரசுகளே !
Ø 
தமிழகத்தின் நெற்களஞ்சியமான நாகை மாவட்டத்தின் விளைநிலங்களை அழித்து விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை கெடுக்கும் மாவட்டத்தின் அனைத்து அனல் மின் நிலையங்களையும் தடை செய் !

Ø தனியார் கம்பெனிகள் இதுவரை அபகரித்துள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கைப்பற்றி மேற்கு வங்கத்தைப்போல் நில மேம்பாடு மற்றும்மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ஏழை விவாசாயிகளுக்கு பிரித்துக்கொடு !

Ø நாட்டின் மின்சாரத் தேவைக்கு பல்லாயிரம் கோடிகளை செலவிட்டு கிடப்பில் போட்டுள்ள ஜெயங்கொண்டம் அரசு மின் உற்பத்தித்  திட்டத்தை உடனே தொடங்குமேலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத, விவசாயத்தை அழிக்காத காற்றாலை, கடலலை, சூரிய சக்தி மற்றும் புவி வெப்ப சக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய வழி செய் !

Ø நாகை மாவட்டத்தின் நீண்ட கடற்கரையை பாழ்படுத்தி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அனைத்து அனல் மின்நிலையங்களுக்கும் அனுமதி வழங்காதே !


Ø நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரம் கோடி ஊழல் செய்து அரசு மின் நிறுவனங்களை நஷ்டப்படுத்தி தனியார் மின் நிறுவனங்கள் கொள்ளையிட ஊக்கமளிக்கும் என்.எல்.சி. சேர்மன் ஊழல் அன்சாரியை கைது செய்து ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய் !

அணு ஆபத்து வேண்டாம், மக்களின் வாழ்வே பெரிதென்று கூடங்குளம் அணு உலைகெதிராகப் போராடும் இடிந்தகரை மக்களின் கோரிக்கையை நிறைவேற்று.

உழைக்கும் மக்களே !
    
நமது வாழ்வாதாரங்கள அழிக்க வரும் இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு பின்புலமாக இருக்கும் தனியார் மயம், உலகமயம் என்ற தேசவிரோத கொள்கைகளை அமுல்படுத்தும் காங்கிரஸ் மற்றும் கழக ஆட்சியாளர்களுக்கு எதிராக..

மாபெரும் அரசியல் சக்தியாக அணிதிரள்வோம் !

வாழ்வுரிமைக்கான வீரம்செறிந்த நந்திகிராம், சிங்கூர் மக்களின் போராட்ட வெற்றியை நமது மண்ணிலும் நடத்திக் காட்டுவோம்.


நாள் : 02-01-2012 திங்கள் காலை 11-00 மணி
இடம்: சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 




தலைமை:

தோழர் என். குணசேகரன் அவர்கள்
மாவட்ட செயலாளர் CPI ML (மக்கள் விடுதலை)
அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டியக்க அமைப்பாளர்

விளக்கவுரை:
தோழர் தங்க. தமிழ்வேலன் அவர்கள்
மையக்குழு உறுப்பினர் CPI ML (மக்கள் விடுதலை)
(தமிழக இளைஞர் கழக மாநில அமைப்பாளர்)

தோழர் அரங்க. குணசேகரன் அவர்கள்
மாநிலதலைவர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டியக்கம்

தோழர் M. செல்வராஜ் அவர்கள்
NLC தொழிற்சங்க தலைவர்
கடலூர் மாவட்ட செயலாளர் CPI ML (மக்கள் விடுதலை)

தோழர் S. சுந்தர் ஒருங்கிணைப்பாளர்
அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டியக்கம்

தோழர் R. அருணாச்சலம் அவர்கள்
தஞ்சை மாவட்ட அமைப்பாளர்   CPI ML  (மக்கள் விடுதலை)

தோழர் A. லூர்துசாமி அவர்கள்
மயிலாடுதுறை வட்ட செயலாளர் CPI ML (மக்கள் விடுதலை)

தோழர் சுப்பு. மகேஷ் அவர்கள் தமிழர் உரிமை இயக்கம்
அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டியக்க இணை அமைப்பாளர்

தோழர் U. ராஜு அவர்கள்
தலித் விடுதலைக்கான மாற்று முன்னணி

திரு N. சிவப்பிரகாசம்.B.Sc.,, அவர்கள்
ஊராட்சி மன்ற தலைவர், திருவெண்காடு.

வழக்கறிஞர் சங்கர் அவர்கள் ஒருங்கிணைப்பாளர்,
கிழக்குக் கடற்கரை மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு.

தோழர் பெரியார் செல்வம் அவர்கள்
தமிழ் இளைஞர் பேரவை மாவட்ட தலைவர்

தோழர் K, விஜயபாலன் அவர்கள்
தமிழக மீனவர்கள் முன்னணி, தரங்கம்பாடி.

தோழர் நட்சத்திரராஜ் சமூக ஆர்வலர்.

தோழர் அன்பு. ராசப்பா அவர்கள்
பு.க.க.இ. மன்றம், மாவட்ட செயலாளர்

தோழர் மதிவாணன் சமூக ஆர்வலர், புளியந்துறை.

தோழர் தட்சிணாமூர்த்தி அவர்கள்
செம்பை ஒன்றிய அமைப்பாளர் CPI  (மக்கள் விடுதலை)

தோழர் M.குணசேகரன் அவர்கள்
மீனவர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு பேரவை, வாணகிரி.

தோழர் இராமலிங்கம் ஆசிரியர் அவர்கள்
புரட்சியாளர் அம்பேத்கர் அரசு பணியாளர் அமைப்பு

திரு நடேச நாட்டார் அவர்கள் மடத்துக்குப்பம்

தோழர் இ. பாரதி அவர்கள் துணைத் தலைவர்
அம்பேத்கர் பொருளாதார மேம்பாட்டு சங்கம்

தோழர் ப. பெருமாள் அவர்கள் மா. தலைவர்.
புரட்சியாளர் அம்பேத்கர் அரசு பணியாளர் அமைப்பு

நிறைவுரை:
தோழர். மீ. த. பாண்டியன் அவர்கள்
மாநில செயலாளர் CPI ML (மக்கள் விடுதலை)

நன்றியுரை:
தோழர் P. கருணாநிதி அவர்கள் CPI ML(மக்கள் விடுதலை)
ஊ. ம. உறுப்பினர், பெருந்தோட்டம்.

  CPI ML (மக்கள் விடுதலை)
காவிரி டெல்டா மண்டல கமிட்டி.

தொடர்புக்கு:  9524584767

விபத்தில் இறந்த தொழிலாளர்களின் மனைவியருக்கு நிரந்தர பணி தர என்.எல்.சி. நிறுவனம் ஒப்புதல் ! வேலைநிறுத்தம் வாபஸ் !











இரண்டாம் அனல்மின்நிலையத்திற்கு பணிக்குசென்ற இரண்டு தொழிலாளர்கள் சாலைவிபத்தில் உயிரிழந்தனர். அவர்களின் வாரிசுகளுக்கு நிர்வாகம் வேலைவாய்ப்பு தரமறுத்ததையடுத்து இரண்டாம் அனல் மின்நிலையத்தில் நேற்று இரவுப்பணியிலிருந்து முதல் பணி இறுதிவரை வேலைநிறுத்தம் நடைபெற்றது.

என்.எல்.சி. நிர்வாக அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு அங்கீகரிகப்பட்ட சங்கங்களுக்கும் மனிதவளத்துறை இயக்குனருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறந்த தொழிலாளர்களின் மனைவியருக்கு 2012 ஜனவரிக்குள் நிரந்தர பணி தருவதாக நிர்வாகம் ஏற்றுக்கொன்டுள்ளது.




















மேற்படி தகவலை பகல் 1.45 மணியளவில் என்.எல்.சி. பொதுமருத்துவ மனையில் நடைபெற்ற கூட்டத்தில் தொ.மு.ச பொதுச்செயலாளர் தெரிவித்தார். ஒப்பந்த நகலை தொ.மு.ச. அலுவலகச்செயலாளர் ஶ்ரீதர் படித்தார். அதில் என்.எல்.சி. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேலைவாய்ப்பு தருவதாக சொல்லப்பட்டுள்ளது. (12 / 3 ஒப்பந்தம் உட்பட இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலைதருவதாக நிர்வாகம் ஏற்றுகொண்ட  இதுபோன்ற பல ஒப்பந்தங்கள் நிர்வாகத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவை போல இதுவும் ஒன்றா ? என்பது 2012 ஜனவரியில்தான் தெரியும்.)  கூட்டத்தில், உயிரழந்த தொழிலாளர்களுக்கு 2 நிமிடம்  மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதியாக போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்த தொ.மு.ச தலைவர் திருமாவளவன் இரண்டாம் பணியிலிருந்து வேலைக்கு செல்லுமாறு இரண்டாம் அனல்மின்நிலையத்தொழிலாளர்களை கேட்டுக்கொண்டார். முன்னதாக பா.தொ.ச பொதுச்செயலாளர் திலகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒரு தொழிலாளி பிக்-அப் பஸ் என்னாயிற்று என்று கேட்டதற்கு ஜனவரியில் விட பேசி ஏற்பாடு செய்யபடும் என மொட்டையாக பதிலளித்தார் தொ.மு.ச பொதுச்செயலாளர் ராஜவன்னியன். இக்கூட்டத்தில் நமது சங்க பொதுச்செயலாளரும் கலந்துகொண்டார்.     

இரண்டாம் அனல்மின்நிலையத்திற்கு பணிக்குசென்ற இரண்டு தொழிலாளர்கள் சாலைவிபத்தில் உயிரிழப்பு ! என்.எல்.சி. நிர்வாகம் நிவாரணம் தரமறுப்பு ! சாலைமறியல்! வேலைநிறுத்தம்!!



  15.12.20011 பகல் 1.45 மணியளவில், இரண்டாம் அனல் மின்நிலையத்தில் பணியாற்றிய சீனியர் டெக்னீஷியன்கள், தோழர்கள் எஸ். ஶ்ரீதரன் மற்றும் டி.எம். மோகன் குமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் இரண்டாம் அனல் மின் நிலையம் நோக்கி இரண்டாம் பணிக்கு உரஆலை அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த மினி வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொழிற்சங்க தலைவர்களுக்கும் நிர்வாகத் தரப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தொழிற்சங்க தலைவர்கள் வைத்த இரண்டு கோரிக்கைகளான             
1. உயிரழந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி. யில்
வேலை வாய்ப்பு
2.நிறுத்தப்பட்ட பிக்-அப் பேருந்துகளை மீண்டும் இயக்கவேண்டும்
ஆகியவற்றை நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டதால் உடல்களை பிணவறைக்கு அனுப்ப மறுத்த தொழிலாளர்கள் உடல்களை குளிர்பதன கண்ணாடி பெட்டிகளில் மருத்துவ மனையிலேயே வைக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக தொழிலாளர்கள் பார்வையிட்டுவருகின்றனர். மருத்துவமனை எதிரில் சாலைமறியல் செய்யப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட என்.எல்.சி பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் அனல் மின்நிலையத் தொழிலாளர்கள் இரவுப்பணியிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நமது சங்கம், உயிரழந்த இரண்டு தோழர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. என்.எல்.சி. நிர்வாகம் தனது பிடிவாதத்தை கைவிட்டு மேற்படி இரண்டு கோரிக்கைகளையும்  உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.