WEDNESDAY, 11 JANUARY 2012
மத்திய, மாநில
அரசுகளே !
விவசாயிகள், மீனவர்கள்
வாழ்வுரிமையை பறிக்கும் பெருந்தோட்டம் சிந்தியா பவர் பிளாண்ட் உள்ளிட்ட நாகை
மாவட்டத்தின் அனைத்து தனியார் அனல் மின்நிலையங்களையும் நிரந்தரமாகத் தடை செய் !!
தொடர் முழக்கப்போராட்டம்
விவசாயிகள், மீனவர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் பெருந்தோட்டம் சிந்தியா பவர் பிளாண்ட் உள்ளிட்ட நாகை மாவட்டத்தின் அனைத்து தனியார் அனல் மின் நிலையங்களையும் நிரந்தரமாகத் தடை செய்யக் கோரி தொடர் முழக்கப் போராட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் (மக்கள் விடுதலை) காவிரி டெல்டா மண்டல கமிட்டி சார்பாக 10.01.2012, செவ்வாய் காலை11 மணியளவில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
கணிசமான பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டத்திற்கு இ.க.க மா-லெ (ம. வி) நாகை மாவட்ட செயலாளரும் அனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டியக்க அமைப்பாளருமான தோழர். என்.குணசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இ.க.க மா-லெ (ம. வி) பொதுச் செயளாலர் தோழர். ஜே. சிதம்பரநாதன் அவர்கள் போராட்டத்தை துவக்கிவைத்து உரையாற்றினார்.
அனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். எஸ். சுந்தர்,இ.க.க மா-லெ (ம. வி) மையக்குழு உறுப்பினரும் தமிழக இளைஞர் கழக மாநில அமைப்பாளருமான தோழர். தங்க. தமிழ்வேலன், நமது சங்க தலைவரும் இ.க.க மா-லெ (ம. வி) கடலூர் மாவட்ட செயலாளருமான தோழர். எம். செல்வராஜ் ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் விளக்கவுரையாற்றினர்.
இ.க.க மா-லெ (ம. வி) மாநில செயலாளர் தோழர். மீ.த. பாண்டியன் நிறைவுரையாற்றினார்.