குடியரசு
தின விழாவில் டாக்டர் அம்பேத்கரின் படத்தை புறக்கணித்த என்.எல்.சி. நிறுவன தலைவர் மற்றும்
நிர்வாக இயக்குனர் திரு.ஏ.ஆர். அன்சாரி 26-01-2012
அன்று காலை நெய்வேலி
பாரதி விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள சென்ற போது
நெய்வேலி நகரிய இரட்டைப்பாலம் அருகே
கறுப்புக்கொடி
காட்டிய என்.எல்.சி. SC/ST பணியாளர்கள் நலச்சங்க
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நமது சங்க தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் செயலாளர் ஆகியோர்
சந்தித்து அவர்களுடைய கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
முன்னதாக
அவர்கள் விநியோகித்த துண்டறிக்கையில்குடியரசு தின விழாவில் டாக்டர் அம்பேத்கரின்
படத்தை புறக்கணித்த என்.எல்.சி. நிர்வாகத்தை வன்மையாக கண்டித்துள்ளதோடு என்.எல்.சி. நிர்வாகத்திற்கு கீழ்க்காணும் கேள்விகளை
எழுப்பியுள்ளனர்.
இந்தியா
குடியரசு நாடாக, சட்டம் இயற்றிய
சட்ட சிற்பி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படத்தினை,
என்.எல்.சி. நிர்வாகம் தொடர்ந்து குடியரசு தினம், சுதந்திர தின விழாக்களில் புறக்கணிப்பது ஏன்?
டாக்டர்
அம்பேத்கர் அவர்களை தேசியத் தலைவராக கருதாமல், சாதியத் தலைவராக கருதுவதுதான் NLC யின் இறையாண்மையா?
2012
என்.எல்.சி. காலண்டரில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் தேதியை நலச்சங்கம் கூறிய பிறகுதான்
ஸ்டிக்கர் போட்டு ஒட்டுவதற்கு, என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ஞாபகம்
வந்ததா?
எமது
சங்கக் காப்பாளர் தொல்.திருமாவளவன், M.P. யை அவமதித்ததை தொடர்ந்து, இனி தவறு நடக்காது என் வாக்குறுதி அளித்த என்.எல்.சி. நிர்வாகமே, இன்னும் உன் சாதிய புத்தி மாரவில்லையே! ஏன்?
என்.எல்.சி. இந்திய அரசு நிறுவனமா! சாதிவெறியர்களின் கூடாரமா?
SC/ST முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு
ஸ்காலர்ஷிப் கொடுக்காமல் நிறுத்திய சாதி வெறியர் யார்?
சாதிய
கொடுமைகளுக்கு இயற்கையே தண்டனை கொடுத்ததுபோல பாரதி விளையாட்டரங்கில் வைத்திருந்த
டிஜிட்டல் பேனர் 25-01-2012 அன்று
தாறுமாறாக கிழிந்த பின்பும், புதியதாக
அச்சிட்ட டிஜிட்டலில் டாக்டர். அம்பேத்கரின்
படத்தை அச்சிட மறுப்பது ஏன்?
டாக்டர். அம்பேத்கர் தேசவிரோதியா?