Mr. Prabhakaran Ramachandran
|
Our Lawyer Mr. Prabhakaran
Ramachandran, a US trained Attorney, is a very successful corporate and
commercial lawyer that has litigated and helped negotiate various complex
corporate-commercial issues. He has represented corporate as well as
individual clients before the Supreme Court of India, the High Courts at the
Chennai and Madurai and various Trial Courts. He has held senior legal
officer positions with leading MNCs like Ford, L&T and other US based
Corporations.
|
He holds university first rank - Gold medal both in his under
graduation and post graduation in law besides the accolade of being conferred
with the country's "Super Brain Youth of the Year Award" - 2006 by
the popular magazine Competition Success Review.
|
He is currently the legal advisor and consultant to many US and Korean
based MNCs, and NGOs. He is also a visiting faculty at the Dr. Ambedkar Law
University & Anna University, Chennai. To his credit he has written and
published many articles in leading journals and magazines. In addition he is
an International tax consultant and holds membership in a premier taxation
body named "Council on State Taxation"- COST at Washington D.C.
USA.
|
Chief Editor: Com.J. Chithambaranathan,MA BL.
OUR LAWYER
மாற்றத்திற்கு வாக்களியுங்கள்! DTUCக்கு வாக்களியுங்கள்!!
அன்பார்ந்த தொழிலாள
தோழர்களே! வணக்கம்.
இரகசிய வாக்கெடுப்பு தேர்தல் வந்துவிட்டது.
அரசியல் செல்வாக்கைக்காட்டி தொழிற்சங்க அங்கீகாரம் பெற்றது அந்த
காலம். துரோகம் செய்யும்
தொழிற்சங்கத்தை தூக்கியெறியும் இரகசிய வாக்கெடுப்பு ஆயுதம் உங்கள் கையில் இருப்பது
இந்த காலம். அதை முறையாக பயன்படுத்துங்கள்.
ஒவ்வொரு சங்கத்தின் கடந்த கால செயல்பாட்டைமதிப்பீடு
செய்யுங்கள். தொழிற்சங்க இயக்கத்திற்கு புத்துயிரூட்டி புதிய பாதையை காட்டிய ITI
படித்த தொழிலாளர்களுக்கு இன்றுவரை துரோகம் செய்துவரும் பேச்சுவார்த்தை
சங்கங்கள் 92 ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட Foreman பதவியை கானல் நீராக்கினர்.
அதன் பிறகு பதவியைக்கொடுத்துவிட்டு E1 பறித்துவிட்டனர்.
பறிக்கப்பட்ட E1
திரும்பப்பெறுவது பற்றியும், இழந்த Pick
Up வசதியை திரும்பப்பெறுவது பற்றியும் பேச்சுவார்த்தை சங்கங்கள்
ஏன் வாய்திறக்கவில்லை? பேச்சுவார்த்தை சங்கங்கள் மூலம் அவர்களுடைய
கட்சி பலகோடி லாபம் பெற்றதே தவிர இதன் உறுப்பினர்களுக்கு எந்த பயனும் இல்லை.
சாதிக்கு அநீதி நடப்பதாகச்சொல்லி சாதி சங்கம்
துவங்கியவர்கள் 20 ஆண்டுகளாக சாதிக்கு எந்த நீதியும் பெற்றுத்தரவில்லை. இதனால் சில
தலைவர்கள் வசதி வாய்ப்பைப் பெற்றார்களே தவிர உறுப்பினர்களுக்கு எஞ்சியது ஏமாற்றமே.
10 முதல் 15 காலம் இன்கோசர்வில் பணிபுரிந்து
பணிநிரந்தரம் பெற்ற தொழிலாளர்களுக்கு தனது ஓய்வு காலத்தில் பயன்பெறும் வகையில் இன்கோசர்வ்
பணிகாலத்தை கணக்கிட்டு ஒரு பதவி வழங்குவதைப் பற்றி யாரும் பேசவில்லை.
என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியதிலிருந்து
ஊதிய உயர்வு ஒப்பந்தத்துடன் இணைக்கப்படாத Isolated பதவிகளை ஒப்பந்தத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள்
இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
DTUC யை பொறுத்தவரை ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் எப்படி இருக்கவேண்டும்
என்ற முன்மாதிரிகளை தொடர்ந்து படைத்துவருகிறோம்.
ITI தொழிலாளர்களின் போரட்டத்தில் முற்போக்கு சக்திகளின் முன்னணிப்படையாகவும்,
நரசிம்மன் காலத்தில் தொலைந்து போன தொழிற்சங்க
இயக்கத்தை ரகசிய வாக்கெடுப்பு மூலம் புத்துயிரூட்டிய ஒளிவிளக்காகவும்,
அடக்குமுறை நிர்வாகத்தின் பிடரியை பிடித்து
உலுக்கும் DTUC போர்வீரனாகவும் விளங்கிவருகின்றோம்.
1999ல் இரகசியவாக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்தோம்.
2000ல்
உங்களிடம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினோம்.
2001ல் இரகசியவாக்கெடுப்பை கொண்டுவந்தோம்.
2002ல் நரசிம்மன் பென்சன்
திட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்
நடத்தினோம்.
2003ல் நரசிம்மன் பென்சன்
திட்டத்தை தடை செய்து பிடித்த பணத்தை
திரும்பப்பெற்றோம்.
2002ல் LTA, LTC ஒப்பந்தத்திற்கெதிரான
பண பிடித்தம் செய்ததை தடை பெற்றோம்.
2005ல் Perks வரியை நிர்வாகமே கட்டவேண்டும்
என முதன் முதலில் டெல்லி
சென்று மத்திய அரசிடம் எடுத்துரைத்தோம்.
2006ல் ஊழல் புகாரில் சிக்கிய நரசிம்மனை
எதிர்த்து இயக்கம் நடத்தி நரசிம்மனை என்.எல்.சி.யிலிருந்து வெளியேற்றினோம்.
2007ல் தொமுசவின் ஒருசங்க பேச்சுவார்த்தையை
தடை செய்தோம்.
2008ல் 51% வாக்குகள் பெறும் சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு
செல்லும் தீர்ப்பை
பெற்றோம்.
2009ல் அதிகாரிக்கு PRP தொழிலாளிக்கு 51 ஆயிரம் என்ற QPPR, PLI ஒப்பந்தத்தைஎதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு
செய்தோம்.
2010ல்
தொழிலாளர் மீதான அடக்குமுறை நிர்வாகத்தையும், ஊழல்,
.நிர்வாகச்சீர்கேடுகளையும் எதிர்த்து இயக்கம்
தொடங்கி நடத்திவருகி றோம்.
நிறுவனத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய லட்சியப்
போராட்டத்தை நடத்திவருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பும்,
நெருக்கடியும், அச்சுறுத்தல்களும் வேறு எந்த சங்கத்திற்கும் இல்லை.
அடக்குமுறைக்கு வாய்மூடியிருந்த சங்கங்கள்
கூட்டாகக்கூட அடக்குமுறையை எதிர்க்க துணியவில்லை.யார் கூட்டுகிறார்கள் என்று தெரிதுவிடுமோ
என அஞ்சி கூட்டுக்கவுன்சிலை கூட்டாமலேயே இரண்டு வருடங்களாக மிகவும் ஜாக்கிரதையாக சங்கம்
நடத்தினார்கள். துரும்பைகூட கிள்ளாத இவர்கள் இன்று வெற்றிபெற்றுவிட்டதாகவே முடிவுக்கு
வந்துவிட்டார்கள்.
எப்படியாவது பேச்சுவார்த்தைக்கு சென்றுவிட
வேண்டும் என கூட்டணி அமைத்தவர்கள், இதுதான் அடக்குமுறைக் கெதிரான கூட்டணி என்கிறார்கள்.
இன்று நிலவும் அடக்குமுறை நெருக்கடியை உடைத்து
சுத்ந்திரத்தின் காற்றை சுவாசிக்க வேண்டுமானால் பாதியை விட்டுக்கொடுத்து மீதியை பெறும் அரை குறை மாற்றம் தேவையில்லை. தேவை ஒரு தலைகீழ்
மாற்றம்.
எதிர்வரும் காலத்தில்
ü W8 க்குப்
பிறகு E1 பெறுவோம்!
ü E1 பெற்றவர்கள் சுதந்திரமான சக்தியாக மாற துணை நிற்போம்.
ü இன்கோசர்விலிருர்து
பணிநிரந்தரம் பெற்ற
தொழிலாளர்களுக்கு
ஒரு பதவி உயர்வு பெற்று தருவோம்.
ü Isolated பதவிகளை
நிரந்தர ஊதிய விகிதத்துடன் இணைப்போம்.
ü இழந்த
சலுகைகள், உரிமைகளை மீட்டெடுப்போம்.
ü மற்ற
பொதுத்துறை நிறுவனங்களைவிட சிறப்பான ஊதிய உயர்வு ஒப்பந்தம் உருவாக்குவோம்.
வெற்று வாக்குறுதிகளை அள்ளிவீசும்
சங்கங்களுக்கு வாக்களிக்காதீர்கள்!
பல சாதனைகளை படைத்துக்காட்டிய
DTUC சங்கத்திற்கு வாக்களியுங்கள்!
அட்டைகத்தி வீரர்களுக்கு வாக்களிக்காதீர்கள்!
எதற்கும் அஞ்சாமல் போராடும் DTUC
க்கு வாக்க்களியுங்கள்!
பணத்திற்கும், சாதிக்கும் வாக்களிக்காதீர்கள்!
மாற்றத்திற்கு வாக்களியுங்கள்!
வாக்களியுங்கள்!
புரட்சிகரமான தொழிற்சங்கமான DTUC க்கு
வரிசை எண். 5 ல் வாக்களித்து
வெற்றிபெறச்செய்யுங்கள்!
என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் போட்டியிடும் நமது சங்கத்திற்கு தற்காலிகமாகக்கூட கட்டிடம் தர மறுக்கும் நிர்வாகத்தை, கட்டிடம் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை நாட முடிவு!
நமது சங்கம் துவங்கிய காலத்திலிருந்தே
சங்கத்திற்கு அலுவலகக் கட்டிடம் வழங்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்திவந்தோம். நிர்வாகம் தொடர்ந்து மறுத்துவந்தது.
கடந்த ரகசிய வாக்கெடுப்பு தேர்தலின்போதும் தேர்தல் ஆணையாளரிடம்
முறையிட்டும் கிடைக்கப்பெறாததால் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்தோம். ஆனால் நீண்டகால தடையுத்தரவுக்குப்பிறகு ரகசிய வாக்கெடுப்பு வருவதால்,
தொழிலாளர், ஊழியர் நலன் கருதி அம்முடிவை கைவிட்டோம்.
ஆனால்
இம்முறை,
தேர்தலில் போட்டியிடும் தொழிற்சங்கங்களுக் கிடையே, நிர்வாகம் தரும் சலுகைகளில் பாகுபாடு இருக்கக்கூடாது, சமவாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில், நமக்கு
தர்காலிகமாவது வாடகை அடிப்படையில் சங்கக்கட்டிடம் வழங்குமாறு நிர்வாகத்திற்கு ஆலோசனை
வழங்கக்கோரி,தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் 09.03.2012 அன்று மண்டல தொழிலாளர் ஆணையாளரிடம் கோரிக்கை மனுவைக்கொடுத்தோம். அவரும், நமது கோரிக்கை மீது தேவையான நடவடிக்கை எடுக்கசொல்லி
11.03.2012 தேதியிட்ட கடிதம் ஒன்றை பொதுமேலாளர்/மனித வளம்/தொழிலுறவு என்.எல்.சி.அவர்களுக்கு அனுப்பி, நகல் ஒன்றை
நமக்கு அனுப்பியிருந்தார். ஆனால் நிர்வாகத்தரப்பிலுருந்து எந்தவித
எழுத்துப்பூர்வ தகவலும் இல்லை. எனவே நமது சங்கம்
17.03.2012 அன்று மேலே குறிப்பிட்ட இருவருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் 3 தினங்களுக்குள் அலுவலகம் வழங்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் நீதிமன்றத்தை நாடுவதைத்தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுளோம்.
.
என்.எல்.சி. தொழிலாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஓர் வேண்டுகோள்!
- என்.எல்.சி. தொழிலாள ஊழியர்கள் மீதான அடக்குமுறைக்கெதிராகவும்
- ,பறிபோன உரிமைகளை மீட்டெடுக்கவும்
- கானல் நீராகிக்கொண்டிருக்கும் கோரிக்கைகள் வெற்றிபெறவும்
- ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கெதிராகவும்
பணி நீக்கம் உள்ளிட்ட பழிவாங்கும்
நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல், சமரசமின்றி
போராடும்
DTUC NLC Workers Solidarity Union
டி.டீ.யு.சி. என்.எல்.சி.ஒர்க்கர்ஸ் சாலிடரிட்டி யூனியன்
வரிசை எண் 5க்கு 02.04.2012 ல் நடைபெறும்
என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில்
என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில்
வாக்களிப்பீர்! வெற்றிபெறச்செய்வீர்!
என்.எல்.சி. தொழிலாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஓர் வேண்டுகோள்!
ü
என்.எல்.சி. தொழிலாள ஊழியர்கள்
மீதான அடக்குமுறைக்கெதிராகவும்
ü
,
பறிபோன உரிமைகளை மீட்டெடுக்கவும்
பறிபோன உரிமைகளை மீட்டெடுக்கவும்
ü
கானல் நீராகிக்கொண்டிருக்கும் கோரிக்கைகள் வெற்றிபெறவும்
கானல் நீராகிக்கொண்டிருக்கும் கோரிக்கைகள் வெற்றிபெறவும்
ü
ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கெதிராகவும்
ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கெதிராகவும்
பணி நீக்கம் உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல், சமரசமின்றி போராடும்
DTUC NLC Workers Solidarity Union
டி.டீ.யு.சி. என்.எல்.சி.ஒர்க்கர்ஸ்
சாலிடரிட்டி யூனியன்
வரிசை எண் 5க்கு
வாக்களிப்பீர்!
வெற்றிபெறச்செய்வீர்!
என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தல்-2012 க்கான மாதிரி வாக்குச் சீட்டு,வாக்குச்சாவடிகளின் பட்டியல் மற்றும் இறுதிவாக்காளர் பட்டியல் இன்று (17.03.2012) வெளியிடப்பட்டன.
என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தல்-2012
க்கான, 10 சங்கங்கள் போட்டியிடும் மாதிரி வாக்குச்சீட்டு,
18 வாக்குச்சாவடிகள் மற்றும் தபால் வாக்குகள் பற்றிய விவரப்பட்டியல்
மற்றும் 536 பக்கங்கள் கொண்ட 13192 வாக்காளர்களின்
பட்டியல் இன்று வெளியிடப்பட்டு, தேர்தலில் போட்டியிடும்
10 சங்கங்களுக்கும் வழங்கப்பட்டன.
விவரங்களை
கீழே காண்க:
மாதிரி வாக்குச்சீட்டில் கீழே உள்ளவாறு
எண்கள் தரப்பட்டுள்ளன
AITUC NLC United workers Union
ஏ.ஐ.டீ.யு.சி. என்.எல்.சி. ஐக்கிய தொழிலாளர் சங்கம்
1
NLC Anna Workers & Staff Union (ATP)
என்.எல்.சி. அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம்
2
CITU NLC Labour & Staff Union
சிஐடியு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கம்
3
NLC Confederation of Trade Unions
என்.எல்.சி. கான்பெடரேஷன் ஆப் டிரேடு யூனியன் 4
DTUC NLC Workers Solidarity Union
டி.டீ.யு.சி. என்.எல்.சி.ஒர்க்கர்ஸ் சாலிடரிட்டி யூனியன் 5
NLC Labour & Staff Progressive Union (MLF)
என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் முன்னேற்ற சங்கம் (எம்.எல்.எப்) 6
NLC Moovendar Trade Union
என்.எல்.சி. மூவேந்தர் தொழிற்சங்கம் 7
NLC Pattali Thozhir Sangam (PTS)
என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்கம் (பா.தொ.ச) 8
NLC Thozhilalar Ottrumai Maiyam
என்.எல்.சி. தொழிலாளர் ஒற்றுமை மையம் 9
NLC Workers Progressive Union (LPF)
என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச.) 10
வாக்குச்சாவடிகள்
விவரம்
மொத்தம் 14
பகுதிகள் 18 வாக்குச்சாவடிகள்
1. சுரங்கம்-1
வாக்குச்சாவடி எண். 1
B-POINT 1096 வாக்குகள்
2 J-TAIL END 947
3 GWC 624
மொத்தம் 2667
2. சுரங்கம்-2
வாக்குச்சாவடி எண். 4
ENTRANCE 818 வாக்குகள்
5 BHD 990
6 SMD (OPERATION) 1246
மொத்தம் 3054
3 TPS-I 7 TPS-I 757
4 TPS-I EXPN,
BUS SECTION 7A BUS SECTION 431
5 TPS-II AND
TPS-II EXPN 8 TPS-II 618
8A TPS-II 699
மொத்தம் 1317
6 MINE-IA 9 MIA 766
7 MM INDG.
GENERAL ZONE 10 MM 340
CARD CHEMICAL UNITS
8 CTO,CO,SYS
MONITORING 11 CTO 580
NEW PROJECT, VIGILANCE
PF,ES
9 P&D
ZONE, FM YARD 12 FM YARD 795
AUTO, FC & MSS
10 CERS &
CWS 13 CWS 470
11 TA,
EDUCATION,SECURITY 14 SECURITY 1001
FIRE, SPORTS
12 GH,EDC 15 GH 515
13 MINE-I,
FIELD OFFICE 16 FIELD OFFICE 311
TELECOMMUNICATION
14 OUT
STATIONS 17 POSTAL 188
REGIONAL OFFICES &
BARSINGSAR & NTPL
ஆகமொத்தம் 13192
2012 ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் போட்டியிடும் தொழிற்சங்கங்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது
திட்டமிட்டபடி
தேர்தலில் போட்டியிடும் சங்கங்கள் வாபஸ் பெறும் நாளான 15.03.2012
இன்று, 2012 ரகசிய
வாக்கெடுப்பு தேர்தலில் போட்டியிடும் தொழிற்சங்கங்களின் இறுதிப்பட்டியலை தேர்தல்
அதிகாரியும் மண்டல தொழிலாளர் ஆணையாளருமான திரு. எம்.எம். ஜெகனாத ராவ் வெளியிட்டார்.நமது சங்கம் ஐந்தாவது வரிசையில் உள்ளது.
தொழிற்சங்கங்களின் பட்டியல்
AITUC NLC United workers Union
ஏ.ஐ.டீ.யு.சி. என்.எல்.சி. ஐக்கிய தொழிலாளர் சங்கம்
NLC Anna Workers & Staff Union (ATP)
என்.எல்.சி. அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம்
CITU NLC Labour & Staff Union
சிஐடியு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கம்
NLC Confederation of Trade Unions
என்.எல்.சி. கான்பெடரேஷன் ஆப் டிரேடு யூனியன்
DTUC NLC Workers Solidarity Union
டி.டீ.யு.சி. என்.எல்.சி.ஓர்க்கர்ஸ் சாலிடரிட்டி
யூனியன்
NLC Labour & Staff Progressive Union (MLF)
என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் முன்னேற்ற சங்கம் (எம்.எல்.எப்)
NLC Moovendar Trade Union
என்.எல்.சி. மூவேந்தர் தொழிற்சங்கம்
NLC Thozhilalar Ottrumai Maiyam
என்.எல்.சி. தொழிலாளர் ஒற்றுமை மையம்
NLC Pattali Thozhir Sangam (PTS)
என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்கம் (பீ.டீ.எஸ்)
NLC Workers Progressive Union (LPF)
என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச.)
சி.ஐ.டி.யு சங்கம் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் ஆதரவளிக்கக்கோரி நமது சங்கத்திற்கு கடிதம்
ரகசிய
வாக்கெடுப்பு தேர்தலில் சி.ஐ.டி.யு சங்கம் வெற்றிபெற நமது சங்கத்தின் ஆதரவை கேட்டு அச்சங்கத்தின் தலைவர்
மற்றும் பொதுச்செயலாளர் கடிதம் ஒன்றை, நமது சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளரை சந்தித்து 13.03.2012 அன்று வழங்கினர்.
என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் 02.04.2012 ல் நடைபெறுகிறது.
பி.சிவராஜன்-எம்.எம்.ஜெகனாத ராவ் |
என்.எல்.சியில் ரகசிய வாக்கெடுப்பு
தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம், தேர்தல் ஆணையாளரும், மண்டல
தொழிலாளர் நல ஆணையாளருமான திரு.எம்.எம். ஜெகனாத ராவ், உதவி தேர்தல்
ஆணையாளரும், உதவி தொழிலாளர்
ஆணையாளருமான திரு. பி. சிவராஜன்,தொழிலாளர்
அமலாக்க அதிகாரி திரு. சரவணன் ஆகியோர் தலைமையில் 11.03.2012 அன்று என்.எல்.சி. பணியாளர் மேம்பாட்டு மையம், வட்டம்-20ல் காலை 11.30 மணியளவில்
நடைபெற்றது.
என்.எல்.சி. சார்பாக முதன்மை
பொதுமேலாளர்/ மனித வளம் திரு. பெஞ்சமின் ராயப்பன், பொதுமேலாளர்/மனித வளம்/ தொழிலுறவு திரு. மகேஸ்வரன்
மற்றும் பொதுமேலாளர்/மனித வளம் திரு. முத்து, துணை
தலைமை மேலாளர்/மனித வளம் திரு. அறிவு ஆகியோரும், நமது சங்க தலைவர் மற்றும் செயலாளர் உட்பட 15 சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்துகொண்டனர். கீழ்காணும் வகையில் தேர்தல் நடவடிக்கைகள்
முடிவு செய்யப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் 2012 - நிகழ்ச்சி நிரல்
சங்கங்கள் தேர்தலில் போட்டியிட எழுத்து பூர்வ விருப்பம் தெரிவித்தல் 11.03.2012
உத்தேச வாக்காளர் பட்டியல் தயாரித்து வெளியிடுதல் 13.03.2012,
3.00 மணி
பட்டியல் மீது ஆட்சேபணை தெரிவித்தல் 15.03.2012,
5.00 மணி வரை
நேரடி வாக்காளர்கள் மற்றும் தபால் வாக்காளர் பட்டியல் வெளியீடு 16.03.2012, 10.00 மணி
வேட்பு மனு திரும்பப்பெறுதல் 15.03.2012,10.00
மணி
போட்டியிடும் சங்கங்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு 15.03.2012, 3.00 மணி
மாதிரி வாக்குச்சீட்டு வெளியீடு 17.03.2012, 10.00 மணி
தபால் வாக்குகள் அனுப்புதல் 18.03.2012
வாக்களித்த தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரி திரும்பப்பெறுதல் 30.03.2012, 5.00 மணி
என்.எல்.சி. மருத்துவமனை உள்நோயாளி வாக்காளர் பட்டியல் 29.03.2012,
10.00 மணி
வாக்குச்சாவடி மற்றும் தேர்தல் முகவர்களுக்கு அனுமதி கடிதம் 30.03.2012 10.00 மணி
தேர்தல் நாளும் நேரமும் 02.04.2012, காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி
வரை
வாக்கு எண்ணிக்கை நாளும் நேரமும்
03.04.2012 காலை 9.00 மணி முதல்
வாக்கு எண்ணும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்
ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில், DTUC க்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? NLC யில் இதுவரை நடந்தது என்ன? இனி நடக்கப்போவது என்ன? தெருமுனைக்கூட்டம்
ரகசிய
வாக்கெடுப்பு தேர்தலில், DTUC க்கு
ஏன் வாக்களிக்க வேண்டும்? NLC யில்
இதுவரை நடந்தது என்ன? இனி
நடக்கப்போவது என்ன? என்ற தலைப்பில்
தெருமுனைக்கூட்டம், 09.03.2012 அன்று
மாலை 7.00 மணியளவில் நெய்வேலி, மெயின்பஜார், காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நமது சங்க பொதுச்செயலாளர் தலைமை தாங்கினார். நமது சங்க, சுரங்கம்-1 பகுதி செயலாளர், இ.க.க.மா.லெ(ம.வி), கடலூர் மாவட்ட குழு உறுப்பினர்கள், தோழர்.ராமர், தோழர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக
நமது சங்கத்தலைவர். தோழர். IPF செல்வராஜ், சிறப்புரையாற்றினார். நமது சங்க, கட்சி
பொருப்பாளர்களும், செயல்வீரர்களும், பெருந்திரளான தொழிலாளர்களும் கூட்டத்தில்
கலந்துகொண்டனர்.
ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் பணிகள் துவக்கக்கூட்டம்
ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் பணிகள்
துவக்கக்கூட்டம், 11.03.2012, காலை 10.30 மணியளவில் என்.எல்.சி. பணியாளர் மேம்பாட்டு
மையம், வட்டம்-20, நெய்வேலியில் நடைபெறுகிறது.
என்.எல்.சி மற்றும் என்.எல்.சியில் செயல்படும் நமது சங்கம் உள்ளிட்ட 15 சங்க பிரதிநிதிகளோடு, ரகசிய
வாக்கெடுப்பு தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்கக்கூட்டத்தை, மண்டல தொழிலாளர் ஆணையர்
திரு.எம்.எம்.ஜெகநாத ராவ் நடத்துகிறார். இக்கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு தேர்தல்
நாள் மற்றும் நடைமுறைகள் முடிவு செய்யப்படும்.
இயற்கையெய்தினார்
இயற்கையெய்தினார்
ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் தெருமுனைக்கூட்டம்
என்.எல்.சி.ஒர்க்கர்ஸ் சாலிடரிட்டி
யூனியன் (டி.ட்டி.யூ.சி)ன் ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் பிரச்சார தெருமுனைக்கூட்டம் 09.03.2012, வெள்ளிக்கிழமை, மாலை 7.00 மணியளவில் நெய்வேலி, மெயின்பஜார், சிவஜோதி உணவகம்
எதிரில் நடைபெறுகிறது.தொழிலாள தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்
Subscribe to:
Posts (Atom)