அன்பார்ந்த தொழிலாள
தோழர்களே! வணக்கம்.
இரகசிய வாக்கெடுப்பு தேர்தல் வந்துவிட்டது.
அரசியல் செல்வாக்கைக்காட்டி தொழிற்சங்க அங்கீகாரம் பெற்றது அந்த
காலம். துரோகம் செய்யும்
தொழிற்சங்கத்தை தூக்கியெறியும் இரகசிய வாக்கெடுப்பு ஆயுதம் உங்கள் கையில் இருப்பது
இந்த காலம். அதை முறையாக பயன்படுத்துங்கள்.
ஒவ்வொரு சங்கத்தின் கடந்த கால செயல்பாட்டைமதிப்பீடு
செய்யுங்கள். தொழிற்சங்க இயக்கத்திற்கு புத்துயிரூட்டி புதிய பாதையை காட்டிய ITI
படித்த தொழிலாளர்களுக்கு இன்றுவரை துரோகம் செய்துவரும் பேச்சுவார்த்தை
சங்கங்கள் 92 ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட Foreman பதவியை கானல் நீராக்கினர்.
அதன் பிறகு பதவியைக்கொடுத்துவிட்டு E1 பறித்துவிட்டனர்.
பறிக்கப்பட்ட E1
திரும்பப்பெறுவது பற்றியும், இழந்த Pick
Up வசதியை திரும்பப்பெறுவது பற்றியும் பேச்சுவார்த்தை சங்கங்கள்
ஏன் வாய்திறக்கவில்லை? பேச்சுவார்த்தை சங்கங்கள் மூலம் அவர்களுடைய
கட்சி பலகோடி லாபம் பெற்றதே தவிர இதன் உறுப்பினர்களுக்கு எந்த பயனும் இல்லை.
சாதிக்கு அநீதி நடப்பதாகச்சொல்லி சாதி சங்கம்
துவங்கியவர்கள் 20 ஆண்டுகளாக சாதிக்கு எந்த நீதியும் பெற்றுத்தரவில்லை. இதனால் சில
தலைவர்கள் வசதி வாய்ப்பைப் பெற்றார்களே தவிர உறுப்பினர்களுக்கு எஞ்சியது ஏமாற்றமே.
10 முதல் 15 காலம் இன்கோசர்வில் பணிபுரிந்து
பணிநிரந்தரம் பெற்ற தொழிலாளர்களுக்கு தனது ஓய்வு காலத்தில் பயன்பெறும் வகையில் இன்கோசர்வ்
பணிகாலத்தை கணக்கிட்டு ஒரு பதவி வழங்குவதைப் பற்றி யாரும் பேசவில்லை.
என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியதிலிருந்து
ஊதிய உயர்வு ஒப்பந்தத்துடன் இணைக்கப்படாத Isolated பதவிகளை ஒப்பந்தத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள்
இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
DTUC யை பொறுத்தவரை ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் எப்படி இருக்கவேண்டும்
என்ற முன்மாதிரிகளை தொடர்ந்து படைத்துவருகிறோம்.
ITI தொழிலாளர்களின் போரட்டத்தில் முற்போக்கு சக்திகளின் முன்னணிப்படையாகவும்,
நரசிம்மன் காலத்தில் தொலைந்து போன தொழிற்சங்க
இயக்கத்தை ரகசிய வாக்கெடுப்பு மூலம் புத்துயிரூட்டிய ஒளிவிளக்காகவும்,
அடக்குமுறை நிர்வாகத்தின் பிடரியை பிடித்து
உலுக்கும் DTUC போர்வீரனாகவும் விளங்கிவருகின்றோம்.
1999ல் இரகசியவாக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்தோம்.
2000ல்
உங்களிடம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினோம்.
2001ல் இரகசியவாக்கெடுப்பை கொண்டுவந்தோம்.
2002ல் நரசிம்மன் பென்சன்
திட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்
நடத்தினோம்.
2003ல் நரசிம்மன் பென்சன்
திட்டத்தை தடை செய்து பிடித்த பணத்தை
திரும்பப்பெற்றோம்.
2002ல் LTA, LTC ஒப்பந்தத்திற்கெதிரான
பண பிடித்தம் செய்ததை தடை பெற்றோம்.
2005ல் Perks வரியை நிர்வாகமே கட்டவேண்டும்
என முதன் முதலில் டெல்லி
சென்று மத்திய அரசிடம் எடுத்துரைத்தோம்.
2006ல் ஊழல் புகாரில் சிக்கிய நரசிம்மனை
எதிர்த்து இயக்கம் நடத்தி நரசிம்மனை என்.எல்.சி.யிலிருந்து வெளியேற்றினோம்.
2007ல் தொமுசவின் ஒருசங்க பேச்சுவார்த்தையை
தடை செய்தோம்.
2008ல் 51% வாக்குகள் பெறும் சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு
செல்லும் தீர்ப்பை
பெற்றோம்.
2009ல் அதிகாரிக்கு PRP தொழிலாளிக்கு 51 ஆயிரம் என்ற QPPR, PLI ஒப்பந்தத்தைஎதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு
செய்தோம்.
2010ல்
தொழிலாளர் மீதான அடக்குமுறை நிர்வாகத்தையும், ஊழல்,
.நிர்வாகச்சீர்கேடுகளையும் எதிர்த்து இயக்கம்
தொடங்கி நடத்திவருகி றோம்.
நிறுவனத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய லட்சியப்
போராட்டத்தை நடத்திவருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பும்,
நெருக்கடியும், அச்சுறுத்தல்களும் வேறு எந்த சங்கத்திற்கும் இல்லை.
அடக்குமுறைக்கு வாய்மூடியிருந்த சங்கங்கள்
கூட்டாகக்கூட அடக்குமுறையை எதிர்க்க துணியவில்லை.யார் கூட்டுகிறார்கள் என்று தெரிதுவிடுமோ
என அஞ்சி கூட்டுக்கவுன்சிலை கூட்டாமலேயே இரண்டு வருடங்களாக மிகவும் ஜாக்கிரதையாக சங்கம்
நடத்தினார்கள். துரும்பைகூட கிள்ளாத இவர்கள் இன்று வெற்றிபெற்றுவிட்டதாகவே முடிவுக்கு
வந்துவிட்டார்கள்.
எப்படியாவது பேச்சுவார்த்தைக்கு சென்றுவிட
வேண்டும் என கூட்டணி அமைத்தவர்கள், இதுதான் அடக்குமுறைக் கெதிரான கூட்டணி என்கிறார்கள்.
இன்று நிலவும் அடக்குமுறை நெருக்கடியை உடைத்து
சுத்ந்திரத்தின் காற்றை சுவாசிக்க வேண்டுமானால் பாதியை விட்டுக்கொடுத்து மீதியை பெறும் அரை குறை மாற்றம் தேவையில்லை. தேவை ஒரு தலைகீழ்
மாற்றம்.
எதிர்வரும் காலத்தில்
ü W8 க்குப்
பிறகு E1 பெறுவோம்!
ü E1 பெற்றவர்கள் சுதந்திரமான சக்தியாக மாற துணை நிற்போம்.
ü இன்கோசர்விலிருர்து
பணிநிரந்தரம் பெற்ற
தொழிலாளர்களுக்கு
ஒரு பதவி உயர்வு பெற்று தருவோம்.
ü Isolated பதவிகளை
நிரந்தர ஊதிய விகிதத்துடன் இணைப்போம்.
ü இழந்த
சலுகைகள், உரிமைகளை மீட்டெடுப்போம்.
ü மற்ற
பொதுத்துறை நிறுவனங்களைவிட சிறப்பான ஊதிய உயர்வு ஒப்பந்தம் உருவாக்குவோம்.
வெற்று வாக்குறுதிகளை அள்ளிவீசும்
சங்கங்களுக்கு வாக்களிக்காதீர்கள்!
பல சாதனைகளை படைத்துக்காட்டிய
DTUC சங்கத்திற்கு வாக்களியுங்கள்!
அட்டைகத்தி வீரர்களுக்கு வாக்களிக்காதீர்கள்!
எதற்கும் அஞ்சாமல் போராடும் DTUC
க்கு வாக்க்களியுங்கள்!
பணத்திற்கும், சாதிக்கும் வாக்களிக்காதீர்கள்!
மாற்றத்திற்கு வாக்களியுங்கள்!
வாக்களியுங்கள்!
புரட்சிகரமான தொழிற்சங்கமான DTUC க்கு
வரிசை எண். 5 ல் வாக்களித்து
வெற்றிபெறச்செய்யுங்கள்!