என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் 02.04.2012 ல் நடைபெறுகிறது.


பி.சிவராஜன்-எம்.எம்.ஜெகனாத ராவ்

என்.எல்.சியில்  ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம், தேர்தல் ஆணையாளரும், மண்டல தொழிலாளர் நல ஆணையாளருமான திரு.எம்.எம். ஜெகனாத ராவ், உதவி தேர்தல் ஆணையாளரும், உதவி தொழிலாளர் ஆணையாளருமான திரு. பி. சிவராஜன்,தொழிலாளர் அமலாக்க அதிகாரி திரு. சரவணன் ஆகியோர் தலைமையில் 11.03.2012 அன்று என்.எல்.சி. பணியாளர் மேம்பாட்டு மையம், வட்டம்-20ல் காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.

என்.எல்.சி. சார்பாக முதன்மை பொதுமேலாளர்/ மனித வளம் திரு. பெஞ்சமின் ராயப்பன், பொதுமேலாளர்/மனித வளம்/ தொழிலுறவு திரு. மகேஸ்வரன் மற்றும் பொதுமேலாளர்/மனித வளம் திரு. முத்து, துணை தலைமை மேலாளர்/மனித வளம் திரு. அறிவு ஆகியோரும், நமது சங்க தலைவர் மற்றும் செயலாளர் உட்பட 15 சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்துகொண்டனர். கீழ்காணும் வகையில் தேர்தல் நடவடிக்கைகள் முடிவு செய்யப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் 2012 - நிகழ்ச்சி நிரல்

சங்கங்கள் தேர்தலில் போட்டியிட எழுத்து பூர்வ விருப்பம் தெரிவித்தல்  11.03.2012

உத்தேச வாக்காளர் பட்டியல் தயாரித்து வெளியிடுதல்                   13.03.2012, 3.00 மணி

பட்டியல் மீது ஆட்சேபணை தெரிவித்தல்                                      15.03.2012, 5.00 மணி வரை

நேரடி வாக்காளர்கள் மற்றும் தபால் வாக்காளர் பட்டியல் வெளியீடு 16.03.2012, 10.00 மணி

வேட்பு மனு திரும்பப்பெறுதல்                                                                               15.03.2012,10.00 மணி

போட்டியிடும் சங்கங்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு   15.03.2012, 3.00 மணி

மாதிரி வாக்குச்சீட்டு வெளியீடு                                                                     17.03.2012, 10.00 மணி

தபால் வாக்குகள் அனுப்புதல்                                                                          18.03.2012

வாக்களித்த தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரி திரும்பப்பெறுதல் 30.03.2012, 5.00 மணி

என்.எல்.சி. மருத்துவமனை உள்நோயாளி வாக்காளர் பட்டியல் 29.03.2012, 10.00 மணி

வாக்குச்சாவடி மற்றும் தேர்தல் முகவர்களுக்கு அனுமதி கடிதம் 30.03.2012 10.00 மணி

தேர்தல் நாளும் நேரமும்  02.04.2012, காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

வாக்கு எண்ணிக்கை நாளும் நேரமும்    03.04.2012 காலை 9.00 மணி முதல்

வாக்கு எண்ணும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்