நமது சங்கத்தின் புதிய தலைவர் S. வேலு





நமது சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம், 16.11.2012 மாலை 6.00 மணியளவில்,       மாநில தலைவர் தோழர். ஜே. சிதம்பரநாதன்,  மற்றும் இ... (மா-லெ) மக்கள் விடுதலையின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர். தோழர். எஸ். அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் தலைமை தாங்கினார். மறைந்த தலைவர். தோழர். செல்வராசுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு சுரங்கம்-1 பகுதி செயலாளர் தோழர். எஸ். வேலு புதிய தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய ஊதிய மாற்று ஒப்பந்தக் கோரிக்கைப் பட்டியல் தயாரிக்க வல்லுநர் குழு அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது  என முடிவு செய்யப்பட்டது. இறுதியாக உணவகப்பகுதி துணைத்தலைவர் தோழர். நா. கென்னடி நன்றி கூறினார்.     

“மக்கள் தலைவரின் மரணம் மலையைவிட கனமானது”

                                                                             
“சமரசமில்லா வர்க்கப் போராளி” தோழர். IPF செல்வராஜ் அவர்கள் 
24-04-1962ல் பிறந்தார்.  இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று பின்னர் என்.எல்.சி. நிறுவனத்தில் தீயணைப்பு துறையில் பணியாற்றிய திரு. முனுசாமி- திருமதி. நாகம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகனாவார் தோழர். செல்வராஜ்.
     நெய்வேலியில் பள்ளியில் படிக்கும்பொழுதே மாணவர் போராட்டங்களில் முன்னணிப் பங்காற்றினார். கருத்த நிறத்திற்கும் கரகரப்பான குரலுக்கும் சொந்தக்காரரான அவர் கடலூரில் ITIல் படிக்கும்பொழுதே மாணவர் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். பின்னர் என்.எல்.சி. நிறுவனத்தில் தொழில் நுட்ப பயிற்சி முடித்தார்.
     தனது 20 வது வயதில் புரட்சிகர கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு உறுப்பினரானார். பின்னர் அக்கட்சியின் வெகுஜன முன்னணியான தமிழக மக்கள் முன்னணியில் முக்கிய பங்காற்றினார். பின்னர் இந்திய மக்கள் முன்னணி (INDIAN PEOPLES FRONT) (IPF)                                             மற்றும் தமிழக இளைஞர் இயக்கம் ஆகியவற்றில் மாவட்ட, மாநில பொறுப்புகளை வகித்து பல மக்கள் போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.
     குறிப்பாக, பண்ருட்டி, அங்குசெட்டிபாளையத்தில் ஒரு நிலப்பிரபுவின் வசம் இருந்த அரசு புறம்போக்கு நிலங்களை பறிமுதல் செய்து நிலமில்லா ஏழைகளுக்கு வீட்டுமனைகளாக பிரித்து கொடுத்த இயக்கத்தில் போர்குணத்துடன் பங்கேற்றார்.
     நெய்வேலியில் பகுதிப்பிரச்சனைகளுக்காகவும், மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவும், தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்களையும், பேரணிகளையும் தலைமை தாங்கிநடத்தினார்.
     ‘உணர்வுகள்’, ‘யதார்த்தம்’, ‘சுரங்கம்’ போன்ற பத்திரிகைகளை நடத்தி இளைஞர்கள், இளந்தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
      1980 களில் என்.எல்.சி. நிறுவனத்தில் இரண்டாம் சுரங்கமும் மற்றும் இரண்டாம் அனல்மின் நிலையமும் துவங்கப்பட்டபோது நெய்வேலி பகுதியில் இருந்த பல கிராமங்களும், விளைநிலங்களும் சொற்ப தொகை இழப்பீடாக கொடுக்கப்பட்டு வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டன. அதிக தொகை இழப்பீடாகக்கேட்டும், வீட்டுகொருவருக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை, மாற்றுக்குடியிருப்பு மனை வழங்கக்கோரியும் நடைபெற்ற வாழ்வாதாரத்தை இழந்த அம்மக்களின் போராட்டங்களில் பங்கேற்று அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற பாடுபட்டார்.
05.01.1987 ல் என்.எல்.சி. நிறுவனத்தில் இரண்டாம் அனல்மின் நிலையத்தில் நிரந்தரப் பணியில் சேர்ந்தார்.
அக்கால கட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாம் சுரங்கத்திலும், இரண்டாம் அனல்மின் நிலையத்திலும் ITI படித்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பணியில் அமர்த்தப்பட்டார்கள். அவர்கள் மிக்க்குறைந்த ஊதியத்தில் இரண்டாண்டு பயிற்சி என்ற அடிமை முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள். வெகுண்டெழுந்த அவ்விளந்தொழிலாளர்கள், வழமையான தொழிற்சங்கங்கள் தங்கள் இழிநிலையை கண்டுகொள்ளாத சூழ்நிலையில் தங்களுக்கென ஒரு தொழிற்சங்கத்தை அமைத்துக்கொண்டு போர்குணமிக்க, வீரம்செறிந்த பல போராட்டங்களை நடத்தி, பின்னர் அச்சங்கத்தை HMS தொழிற்சங்கத்துடன் இணைத்தார்கள்.
தனது கட்சியின் சார்பில் தொழிற்சங்கம் எதுவும் அக்காலகட்டத்தில் இல்லாத நிலையில் தோழர். செல்வராஜ், HMS தொழிற்சங்கத்தில் உறுப்பினரானார். பலபோராடங்களில் பங்கேற்றார். அத்தொழிற்சங்கம் ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் போன்ற நிலையை அடைந்தது. என்.எல்.சி. நிர்வாகம் கண்டு அஞ்சுகின்ற வகையில் இரண்டாம் அனல்மின் நிலைய தொழிலாளர்களின், தன்னிகரற்ற போராட்டத் தலைவனாக தோழர். செல்வராஜ் விளங்கினார்.
அவரோடு செல்வராஜ் என்ற பெயரில் பல தொழிலாளர்கள் பணியாற்றியதால் அவரை தொழிலாளர்கள் அடையாளப்படுத்த IPF செல்வராஜ் .என்றும் IPF என்றும் அழைக்கத்தொடங்கினர்.
என்.எல்.சி. நிர்வாகம், அவரை பலமுறை தற்காலிக பணிநீக்கம் செய்தது.தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அஞ்சி அவற்றை திரும்பப்பெற்றது. அவரை ஒன்றும் செய்யமுடியாத நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் காவல்துறை, பொய்யான கொலை முயற்சி வழக்கொன்றில் அவரை கைது செய்து சிறையிலடைத்தது. அதன் காரணமாக நிர்வாகம் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ததது. தோழர். செல்வராஜ், நிபந்தனை பிணையில் சிலகாலம் சீர்காழியில் தங்கியிருந்தார். அங்கே அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளராகயிருந்த தோழர். குணசேகரன் அவர்களை சந்தித்து கட்சிக்கு அடித்தளமிட்டார். நீதிமன்றம் அவரை நிரபராதியென தீர்ப்பளித்தது. தற்காலிக பணிக்காலத்தில் இழந்த ஊதியமனைத்தையும் மொத்தமாகப்பெற்று மீண்டும் பணியில் அமர்ந்தார். அதனால் அவருடைய செல்வாக்கு தொழிலாளர்கள் அதிகாரிகள் மத்தியில் பன்மடங்கு உயர்ந்தது.
.HMS சங்கம் நடத்திய வெற்றிகரமான, மிகப்பெரிய, வேலைநிறுத்தத்தின் காரணமாக நிர்வாகத்தால் பேச்சுவார்த்தை சங்கமாக அங்கீகரிக்கப்பட்டது. அப்போது தலைமைப்பொறுப்பிலிருந்தவர்களின் சந்தர்ப்பவாத, சமரசப்போக்கின் காரணமாக மூன்று பிரிவுகளாக பிளவுண்டு, ஒரு பெரும்பிரிவினர் தி.மு.க வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் இணந்தனர். தோழர். செல்வராஜ், தனது புரட்சிகர அணிகளோடு வெளியேறினார்.  அப்போது தாழ்த்தப்பட்டோர் சங்கமும், கட்சியும் அவரை அழைத்தன. அவற்றையெல்லாம் ஏற்காமல் தனது கட்சியால் நிறுவப்பட்ட AICCTU  சங்கத்தை நெய்வேலியில் துவங்கி அதன் முதல் தலைவரானார். அவரது சங்கம், சிறிய சங்கமாக இருந்தாலும், பெரிய சங்கங்களால் சாதிக்க முடியாத பல சாதனைகளை படைத்து நெய்வேலி தொழிற்சங்க இயக்கத்தின் போக்கை மாற்றியமைத்தது.
என்.எல்.சி. நிறுவனமே துவங்குவதாக இருந்த ஜீரோ யூனிட் அனல்மின் நிலையத்தை தனியார் துவங்க அனுமதி வழங்கப்பட்டபோது அதனை எதிர்த்து தனியார்மய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை நடத்தியது.
என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளின் சிறிய பகுதியை அதன் பணியாளர்களுக்கே மத்திய அரசு விற்பனை செய்தபோது அது தனியார்மயத்தின் முதல்படி என்றுகூறி, பங்குகளை வாங்கவேண்டாம் என தொழிலாளர் மத்தியில் வேண்டுகோள்விடுத்து பங்குவிற்பனைக்கு எதிராக இயக்கம் நடத்தியது.
ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிலாளர்கள் தங்களுக்காக நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சங்கங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இரண்டாண்டு காலம் மாபெரும் கூட்டியக்கத்தை நடத்தி, நீதிமன்ற உத்தரவு பெற்று முதல் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறச்செய்து வரலாறு படைத்தது.
அவ்வியக்கம் நடைபெறும் போது ஓராண்டு காலத்திற்கும் மேலாக தோழர். செல்வராஜ் அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு பிறகு மீண்டும் பணியிலமர்ந்தார்.
தோழர். செல்வராஜை தற்காலிக பணிநீக்கம் செய்ய காரணமாக இருந்த நிர்வாகத்துறை இயக்குனர் நரசிம்மனின் ஊழல் நடவடிக்கைகளுக்கெதிராக இயக்கம் நடத்தி அவரை என்.எல்.சியை விட்டு வெளியேரச்செய்தது.
என்.எல்.சி. நிறுவனத்தின் பங்களிப்பு இன்றி பணியாளர்களிடம் மட்டுமே பணம் பிடித்தம் செய்து உருவாக்கப்பட்ட என்.எல்.சி. ஓய்வூதிய திட்டத்திற்கெதிராக இயக்கம் நடத்தி, நீதிமன்ற உத்தரவு மூலம் பிடித்தம் செய்த தொகையை திருப்பித்தர வைத்ததது.
என்.எல்.சி. தொழிலாளர்கள் குடும்பத்தோடு அகில இந்திய சுற்றுலா (LTC) செல்ல அனுமதிக்கப்பட்ட தொகையை, முறைகேடாக சென்றார்கள் என்று கூறி நிர்வாகம் பணம் பிடித்தம் செய்ததது, பணம் பிடித்தத்திற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றது.
ரகசிய வாகெடுப்பின்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசங்கப் பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் தோழமை சங்கங்களோடு மீண்டும் நீதிமன்றம் சென்று 51% வாக்குகள் வரை பெறும் சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவேண்டுமென்றும், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படவேண்டுமென்றும் உத்தரவைப் பெற்று பல சங்க பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது.
மேலும் தொழிற்சங்கங்களோடு சேர்ந்து போராடி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8.33% குறைந்த பட்ச போனஸ் பெற்றுத்தந்தது.
என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சித்தபோது, அனைத்து சங்கங்களோடு முன்னணியில் நின்று, வேலைநிறுத்தம் நடத்தி, தனியார் மயத்தை தடுத்து நிறுத்தியது.
மத்திய தொழிலக பாதுகாப்பு படையை என்.எல்.சி. நிறுவனத்தில் அனுமதித்த்தற்கு எதிரான இயக்கம்,துரோகமான ஊதியமாற்று ஒப்பந்தங்களுக்கு எதிரான, அதிகாரிகளுக்கு இணையான ஊக்க ஊதியம், போனசுக்கான கூட்டுப்போராட்டங்கள் என, அதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
தோழர். செல்வராஜ் கடலூர் மாவட்ட கட்சியின் செயலாளராகவும், தொழிற்சங்க செயலாளராகவும் தொடர்ந்து பணியாற்றினார்.
 அவருடைய சமூக சேவையைப் பாராட்டி, தலித் சாகித்ய அக்காடமி, அவருக்கு அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்தது.
தான் சார்ந்த கட்சியில் தலைதூக்கிய வலது சந்தர்ப்பவாத, அரைஅராஜகவாத, சிறுமுதலாளித்துவ தலைமையின், குறுங்குழுவாத கருத்தியலிக்கு எதிராக போராடி, பெரும்பான்மையான உறுப்பினர்கள், தலைவர்களோடு, வெளியேறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலையை துவங்க, முக்கிய பங்காற்றினார். அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். நெய்வேலி தொழிற்சங்கத்தை கட்சியின் ஜனநாயக தொழிர்சங்க மையத்துடன் (DTUC) இணைத்தார்.
என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்கத்திட்டத்தில் நடைபெற்ற, ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் குறித்து என்.எல்.சி. நிறுவனத்தின் தலைவர் அன்சாரி மற்றும் உயரதிகாரிகளை சுட்டிக்காட்டும் வகையில் 12-11-2009ல் “தமிழக அரசியல்” பத்தித்திரிகையில் வெளி வந்த செய்தியை படித்த அப்பாவி தொழிலாளர்கள் 6 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்த்தற்கெதிராக தொழிற்சங்கங்கள் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தி, பணிநீக்க உத்தரவை திரும்பப்பெறச்செய்து தங்கள் கடமையை அத்தோடு முடித்துகொண்டன.
என்.எல்.சி. தலைவர் அன்சாரியின், பணியாளர்கள் மீதான பழிவாங்கும் அடக்குமுறைக்கெதிராகவும், ஊழல் முறைகேடுகளுக்கெதிராகவும், கட்சிய்யின் சார்பாக தோழமை அமைப்புகளோடு சேர்ந்து, ஊழல் எதிர்ப்பு முன்னணியை உருவாக்கினார். அம்முன்னணி மூலம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றியதற்காக ஓராண்டு காலத்திற்குமேல் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாமல் ஊழலுக்கெதிராக  CBI விசாரணை கோரி உயர்நீதிமன்றதில் DTUC சார்பாக வழக்கு தொடுத்தார்.
அதைக்கண்டு அஞ்சிய நிர்வாகம், தோழர். செல்வராஜை, என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து, 28.05.2011ல் பணிநீக்கம் செய்தது. அவரது பணிநீக்கத்திற்கெதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
தோழர். செல்வராஜ், சென்னை CBI சிறப்புநீதிமன்றத்தில், என்.எல்.சி. தலைவர் அன்சாரியின் மீது 10000 கோடி ஊழலை விசாரிக்கக்கோரி, தனிநபர் புக்காரை பதிவுசெய்தார். வரலாற்றிலேயே முதல் முறையாக, அவரது தனிநபர் புகாரை ஏற்றுக்கொண்ட, சென்னை CBI சிறப்புநீதிமன்றம், அன்சாரி மீது FIR  பதிவு செய்து, புகாரை விசாரித்து, அறிக்கையளிக்குமாறு CBIக்கு உத்தரவிட்டது.
மேற்கண்ட உத்தரவிற்கெதிராக, அன்சாரி தன் செல்வாக்கை பயன்படுத்தி இடக்கால தடை பெற்றார்.
தடையை நீக்குவதற்கு தோழர். செல்வராஜ் எடுத்த நடவடிக்கை காரணமாக, வழக்கு விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
28.05.2012 அன்று மாலை நெய்வேலியில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தோழர். செல்வராஜ், மர்மமான முறையில் சாலை விபத்திற்குள்ளகி, பலத்த தலைக்காயத்துடன், சுய உணர்விழந்த நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
தங்கள் உரிமைகளுக்காக தன்னலம் கருதாமல் போராடி வந்த தன்னிகரில்லா தலைவனை எப்படியாவது காப்பாற்றுவதற்காக, அவருடைய மருத்துவச் செலவுக்காக, என்.எல்.சி. தொழிலாளர்களும், அதிகாரிகளும் தாங்களாக முன்வந்து, என்.எல்.சி. வரலாறு காணாத வகையில் ரூபாய் 6 லட்சத்தை மருத்துவ செலவுக்காக வசூல் செய்து கொடுத்தனர். அவருடைய கட்சி மருத்துவ செலவுக்காக ரூபாய் 50000 கொடுத்த்தோடு, முக்கிய தலைவர்கள் 24 மணி நேரமும் அவரோடு இருந்து, அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் அவர் சுயநினைவிழந்த நிலையிலேயே 25.06.2012 அன்று காலை வீர மரணம் அடைந்தார்
வலதுசாரிகள் முதல் தீவிர இடதுசாரிகள் வரையிலான, பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு அவரை “சமரசமில்லா வர்க்கப் போராளி” என அழைத்து, தங்கள் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொண்டனர். 26.06.2012 அன்று நெய்வேலியில் நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் கட்சித்தோழர்களும் கலந்துகொண்டு, ஊழல் அன்சாரிக்கு எதிராக ஆவேச முழக்கமிட்டு, தோழர். செல்வராஜிக்கு வீரவணக்கம் செய்தனர். அவருடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியை 10.07.2012 அன்று நெய்வேலியில் நடத்தி, அவரை இழந்து வாடும், அவருடைய போராட்டங்கள் அனைத்திலும் அவருக்கு ஊக்கமளித்து துணைநின்ற அவரது  துணைவியார் மற்றும் இரண்டு பெண்குழந்தைகளுக்கு ரூபாய் 1 லட்சத்தை நிதியாக வழங்கியது.
                                  
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அதிகாரிகளும் சங்க, கட்சி வித்தியாசமின்றி, நெய்வேலி வரலாறு காணாதவகையில் ரூபாய் 11 லட்சத்திற்குமேல் தோழர். செல்வராஜ் குடும்ப பாதுகாப்பு நிதியாக முன் வந்து அளித்தனர்.
06.10.2012 அன்று, நெய்வேலியில் நடைபெற்ற தோழர். IPF செல்வராஜ் குடும்ப பாதுகாப்பு நிதியளிப்பு கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் அதிகாரிகளும் கட்சித் தோழர்களும் கலந்துகொண்டனர். அனைத்து சங்க தலைவர்களும் தோழர். செல்வராஜுக்கு புகழாரம் சூட்டி, தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிதியை இ.க.க. (மா-லெ) மக்கள் விடுதலையின் பொதுச்செயலாளர். தோழர். ஜே. சிதம்பரநாதன் அவர்களும் தொ.மு.ச பொதுச்செயலாளர் திரு. ராசவன்னியன் அவர்களும் தோழர். செல்வராஜின் குடும்பத்திற்கு வழங்கினர். தனது சங்கத்தின் சார்பாக ரூபாய் 1 லட்சத்தை விரைவில் வழங்குவதாக திரு. ராசவன்னியன் அறிவித்தார்.
கடமை தவறாத தொழிலாளியாக, நல்ல குடும்பத் தலைவராக, தையல் கலைஞராக, ஓவியராக, அறிவியல், கலை, இலக்கிய ஆர்வலராக, ஆற்றல் மிகு பேச்சாளராக, எழுத்தாளராக, தொழிற்சங்க தலைவராக, கட்சித்தலைவராக, சமரசமில்லா வர்க்கப் போராளியாக, உழைக்கும் மக்களின் வாளும், கேடயமுமாக விளங்கிய தோழர். செல்வராஜ் நம்மை விட்டு பிரிந்தாலும் மக்களின் மனங்களில் என்றென்றும் நிலைத்து நிற்பார்.

தோழர். IPF செல்வராஜ் குடும்ப நிதியளிப்புக் கூட்டம்




பாட்டாளி வர்க்கத்தின், குறிப்பாக என்.எல்.சி. தொழிலாளர் வர்க்கத்தின் 

வாளும், கேடையமாக விளங்கியவரும், ஊழலுக்கெதிராக தனது இறுதி 

மூச்சுவரை அயராது போராடியவருமான, “சமரசமிலா வர்க்கப்போராளி”  

கடலூர் மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – 

லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை மற்றும்  நெய்வேலி DTUCன் 

தலைவருமான மறைந்த        தோழர். IPF செல்வராஜ், அவர்களின் 

குடும்ப பாதுகாப்பு நிதியளிப்புக் கூட்டம், 06.10.2012, சனிக்கிழமை, மாலை 6.00 மணியளவில் நெய்வேலி, வட்டம்-17, மு.சு. மணி அரங்கில் நடைபெறவுள்ளது.
      தோழர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
     சாதி, சங்க, கட்சி வித்தியாசமில்லாமல் நெய்வேலி வரலாறு காணாத வகையில் ரூபாய் ஆறு லட்சத்திற்கு மேல் மருத்துவ நிதியாகவும், ரூபாய் பதினோறு லட்சத்தை குடும்ப பாதுகாப்பு நிதியாகவும் வர்க்க உணர்வோடு வழங்கிய அனைத்துத் தோழர்களுக்கும் எங்களின் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்
                                 இவண்
  என்.எல்.சி. ஒர்க்கர்ஸ் சாலிடாரிட்டி யூனியன் ( DTUC ), நெய்வேலி

அரசியல் பயிற்சி முகாம்


செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலையின் டெல்டா மண்டல அரசியல் பயிற்சி முகாம், வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. 40 கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
08.09.2012 அன்று தத்துவம் மற்றும் பொருளாதாரம் என்ற தலைப்பில் தோழர். ஜே. சிதம்பரநாதன், பொதுச் செயலாளர் அவர்களும், மறுநாள் கட்சியின் அடிப்படை ஆவணத்திலிருந்து, பொதுத்திட்டம்,தமிழக விவசாயத்திட்டம், கட்சி அமைப்புச் சட்டம், உள்ளிட்ட தலைப்புகளில் தோழர். மீ. . பாண்டியன், மாநில செயலாளர், அவர்களும் பயிற்சியளித்தனர். கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் தோழர். அண்ணாதுரை, மத்தியக் குழு உறுப்பினர்கள்  தோழர்கள் நா. குணசேகரன்,           தங்க. தமிழ்வேலன், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் குப்புசாமி, அருணாச்சலம், கடலூர் மாவட்ட செயலாளர். தோழர். ராமர் ஆகியோரும் கலந்துகொண்டனர்,  

தோழர். மு. செல்வராஜ் நினைவேந்தல்


தோழர். மு. செல்வராஜ் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 10.07.2012 மாலை 5.00 மணியளவில் நெய்வேலி, வடகுத்து பவுனாம்பாள் நகரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இ...மா-லெ மக்கள் விடுதலையின் மாநில செயலாளர் தோழர். மீ.. பாண்டியன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தோழர். குணசேகரன் தோழரின் படத்தை திறந்து வைத்தார். நெய்வேலி ஜனநாயக தொழிற்சங்க மையத்தின் பொறுப்பாளர்கள், நண்பர்கள், கட்சியின் கடலூர், சேலம், திருவள்ளூர், தஞ்சை மாவட்ட செயலாளர்கள், இளைஞர் இயக்க மாநில பொறுப்பாளர்  தோழர். தங்க. தமிழ்வேலன், கடலூர் மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர். ராஜா, தோழர்.குப்புசாமி, .தொ.மை. மாநில செயலாளர் தோழர். சுகுந்தன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். கட்சியின் கட்டுப்பாட்டு குழு தலைவர். தோழர். அண்ணாதுரை மறைந்த தோழர் செல்வராஜின் துணைவியார் திருமதி. நற்குணபூசனி அவர்களிடம் கட்சியின் சார்பாக குடும்ப நிதி ரூ.1 லட்சத்தை வழங்கினார். திரளான கட்சி உறுப்பினர்களும், தொழிற்சங்க பொறுப்பாளர்களும், நண்பர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


நினைவேந்தல்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை சார்பாக,  தோழர். மு. செல்வராஜ் அவர்களின் நினைவேந்தல்  10.07.2012, செவ்வாய் மாலை 3.00 மணியளவில் பவுனாம்பாள் நகர், வடக்குத்து, நெய்வேலியில் நடைபெறுகிறது.


வீர வணக்கம்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மக்கள் விடுதலையின் கடலூர் மாவட்ட செயலாளரும், ஜனநாயக தொழிற்சங்க மையம் ( DTUC),  நெய்வேலி, தலைவரும், நெய்வேலி தொழிலாளர் வர்க்கத்தின் மிகப்பெரிய போராளியுமான
தோழர். IPF M. செல்வராஜ் அவர்கள்
25.06.2012, திங்கள் கிழமை, காலை 7.45 மணியளவில் சென்னை மலர் மருத்துவமனையில் அகால மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழரின் இறுதி ஊர்வலம் 26.06.2012, செவ்வாய் கிழமை, மாலை 3.00 மணியளவில் டி-3 , இத்தாலியன் சாலை, வட்டம்-27, நெய்வேலி டவுன்ஷிப்பிலிருந்து புறப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை, கடலூர் மாவட்டம்
 ஜனநாயக தொழிற்சங்க மையம் ( DTUC),  நெய்வேலி.

INDUSTRIAL RELATIONS-1


INDUSTRIAL RELATIONS-1
1.      Industrial Relations (IR) means relations between  a. Industry and Industry  b. Industry and Government  c. Management and Industry  d. Management and Workers  Ans: d
2.      For stable IR, the leader of a Trade Union should be  a. a  lawyer  b. a worker  c.a retired worker  d. An outside union leader  Ans: b
3.      The first major contributor to the concept of IR was  a. Webbs  b. Marx  c.Bain  d. Clegg  Ans: a
4.      The reasons necessary for good IR are  a. to establish Industrial Democracy and to formulate labour relations  b. to formulate collective bargaining  c. to enact laws and to boost the discipline of the workers  d. All the above.  Ans: d
5.      System Theory owes much to the pioneering work of  a. webb  b. Dunlop c. Marx  d. Bain  Ans: b
6.      Dunlop’s approach to IR was supported by  a. Flanders  b. Webbs  c. Marx  d.all the above     Ans: a
7.      Dunlop’s approach to IR was criticised by a.Bain b. Clegg c. Banks and hyman  d. All the above     Ans: d.
8.      According to Dunlop the development of IR systems consists of  a. Actor  b. Contexts  c. an ideology and a body of rules d. All the above     Ans: d
9.      According to Dunlop, the actors who take part in rule making are: a hierarchy of  a. managers and their representatives  b. workers and their spokesmen  c. Govt and private agencies  d. All the above     Ans: d
10.  Open Systems approach to IR is explained by a. Ackroyd  b. Katz and Kahn  c. A. Fox  d.all the above     Ans: b
11.  The giant legislation on the IR scenario is  a. The Industrial Employment (standing orders) Act, 1946    b. The Industrial Disputes Act, 1947  c. The Trade Union Act, 1926  d. The factories Act, 1948    Ans: b
12.  The remedy for good IR is  a. management by love  b. co-ercive management  c. Evasive management  d. Submissive management    Ans: a
13.  NCL means  a. Notional Commission of Labour  b. Neyveli Commission of Labour  c. National Committee of Labour  d. National Commission of Labour  Ans: d
14.  QWL means a. Quality of Work Load  b. Quality of Work Life  c. Quality of Work Limit  d. Quality of Work Love   Ans: b
15.  The role of Trade Unions for developing the QWL of their members and the Society at large is  a. Broker  b. Mediator  c. Fighter  d. Change Agent.    


நமது தலைவர் தோழர். செல்வராஜ் நலம் பெற விழைகிறோம்


என்.எல்.சி. தொழிற்சங்க இயக்கத்தின் மிகப்பெரிய தலைவரும்
நமது சங்கத் தலைவருமான தோழர். செல்வராஜ் அவர்கள் 28.05.2012 அன்று சாலை விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து நினைவிழந்த நிலையில் சென்னை, போர்ட்டீஸ் மலர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் பூரண குணமடைய வேண்டுகிறோம். அவருடைய சிகிச்சைக்காக நன்கொடை வழங்கிவரும் என்.எல்.சி தொழிலாளர் வர்க்கத்திற்கும் நலம் விரும்புவோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வங்கி மூலம் நன்கொடை செலுத்த விரும்புபவர்கள் நமது சங்க வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஏஐடியுசி பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா, எம்.பி., தலைமையில் நாளை (16.05.2012) ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரிக்கை பேரணி, பொதுக்கூட்டம்

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 14,000 பேர், தங்களுடைய ஊதிய உயர்வு, சமவேலைக்கு சமஊதியம், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த 25 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.உண்ணாவிரதம், சாலை, ரயில் மறியல் போராட்டங்களை நடத்தினர். பல சுற்று முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. நாளை 26வது நாள் ஏஐடியுசி பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா, எம்.பி., தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரிக்கை பேரணி,  நெய்வேலி மத்திய  பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்துகின்றனர்.

13,000 என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வெல்க!


ஊதிய உயர்வு, சமவேலைக்கு சமஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த 18 நாட்களாக போராடிவரும் 13,000 என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறோம். உண்ணாவிரதம், சாலை மறியல், ரயில் மறியல் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு உறுதியோடு போராடிவரும் தொழிலாளர்களுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.  உடனடியாக மத்திய அரசு தலையிட்டு அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நமது சங்க பொறுப்பாளர்களை என்.எல்.சி. நிர்வாகம் பணியிட மாற்றம் செய்தது சரியா? என 3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டுமென மத்திய அரசு, சென்னை, மத்திய அரசு தொழிலாளர் தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு உத்திரவிட்டுள்ளது.


இரண்டாம் அனல் மின் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நமது சங்கப் பொறுப்பாளர்கள் எல். ராஜேந்திரன், துணைத்தலைவர், இரா. இரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் மற்றும் பி. ராமலிங்கம், செயலாளர் ஆகியோரை முறையே சுரங்கம்-1, சுரங்கம்-2 மற்றும் சுரங்கம்-1ஏ ஆகிய பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்து என்.எல்.சி. நிர்வாகம் 26.05.2011 அன்று உத்திரவிட்டது.
இந்நடவடிக்கையானது, தொழில் தகராறு சட்டம், 1947, அட்டவணை-5 ன் கீழ் தொழிற்சங்க விரோத நடவடிக்கையாகும் என குறிப்பிட்டு சென்னை, மண்டல தொழிலாளர் ஆணையாளர் (மத்திய) முன்பு நமது சங்கம் சார்பாக தொழில் தகராறை 01.06.2011ல் எழுப்பினோம்.
அது சம்பந்தமான சமரச பேச்சுவார்த்தை, நமது சங்கத்திற்கும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கும் இடையில்  சென்னை, தொழிலாளர் துணை ஆணையாளர் (மத்திய) முன்பு 26.05.2011ல் தொடங்கி பல்வேறு நாட்களில் நடைபெற்று இறுதியாக 23.11.2011ல் நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிவடைந்தது. முறிவறிக்கை மத்திய அரசுக்கு 12.12.2011ல் அனுப்பிவைக்கப்பட்டது.
அம்முறிவறிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, தொழிலாளர் அமைச்சகம், “ துணைத்தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் செயலாளர் தொழிற்சங்கப் பொறுப்பு வகிக்கும் திருவாளர்கள் எல்.ராஜேந்திரன், ஆர். ரவிச்சந்திரன் மற்றும் பி.ராமலிங்கம் ஆகியோரை பணியிட மாற்றம் செய்துள்ள, நிர்வாகத்தின் நடவடிக்கை நியாயமானதுதானா? சம்மந்தபட்ட பணியாளர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட வேண்டும்” என விசாரித்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கிடுமாறு சென்னை, மத்திய அரசு தொழிலாளர் தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு 19.04.2012 அன்று உத்திரவிட்டுள்ளது.      

THE MINES ACT, 1952


1.      First Indian Mines Act was passed in the year  a.1947  b.1950  c.1923  d.1952

2.      The Mines Act was passed in the year a. 1947  b.1950  c.1923  d.1952

3.      Chief  Inspector of Mines and Inspectors of Mines are appointed by  a.State Government b. Central Government  c.Owner of M ines  d.Agent of Mines

4.      According to Mines Act cool and whole some drinking water shall be supplied to every person, at least  a. 1 litre  b. 2 litres  c. 3 litres  d. 8 litres

5.      No person shall be allowed to work in a Mine for not more than  a. 7 days and 56 hours in a week  b. 6 days  and 48  hours in a week  c. 5 days and 45  hours in a week  d. 6 days and 42 hours in a week

6.      A canteen shall be provided in a Mine, where number of persons working is  a. 100 or more  b.150 or more  c. 200 or more   d. 250 or more

7.      There shall be one Welfare Officer in a Mine, where the number of persons employed is  a. 100 or more  b. 200 or more  c.500 or more  d. 1000  or more

8.      For every 2000 employee in a Mine, the number of Welfare Officer shall be  a. 1  b. 2  c.3  d. 4

9.      Any person who is the immediate proprietor or lessee or the occupier of the mine is called  a. Owner  b. Agent  c. Manager  d. Operator

10.  Any person,  who acting or purporting to act on behalf of the owner , takes part in the management, control, supervision or direction  of the Mine is called  a. Owner  b. Agent  c. Manager  d. operator

மே நாள் வரலாறு


மே நாள்
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.
[தொகு]தொழிலாளர் போராட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.
[தொகு]பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
[தொகு]ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
[தொகு]ரஷ்யாவில் மே தினம்
http://bits.wikimedia.org/skins-1.20wmf1/common/images/magnify-clip.png
முதல் மே நாளின் போது உருசியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டி
சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்குஇடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
[தொகு]அமெரிக்காவில்
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்புஎன்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.
[தொகு]சிக்காகோ பேரெழுச்சி
மே 3, 1886 அன்று மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
[தொகு]அமெரிக்காவின் கறுப்பு தினம்
நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
[தொகு]அனைத்து நாடுகளிலும் மே தினம்
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.
[தொகு]இந்தியாவில் மே தினம்
இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.